மக்கள் வங்கியின் செயல்படாத சொத்துக்கள் (Non-Performing Assets - 'NPA') தொகுப்பு தொடர்பாக பல பொதுத் தளங்களில் சமீபத்தில் இடம்பெற்று வருகின்ற கருத்து பரிமாறல்களின் பின்னணியில், வங்கி பின்வரும் உண்மைகளைத் தெளிவுபடுத்த விரும்புகிறது:

செயல்படாத சொத்துக்கள் எனப்படுபவை வட்டி மற்றும்/ அல்லது முதல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முறையாக செலுத்தப்படாத கடன்கள் ஆகும். செயல்படாத சொத்துக்கள் என்பதை தள்ளுபடி செய்யப்படுவது என்று வெறுமனே வகைப்படுத்திவிட முடியாது. 

கடன் ஒன்று செயல்படாத சொத்து என வகைப்படுத்தப்பட்டால், வங்கியானது, தொடர் முயற்சிகள், பேச்சுவார்த்தைகள், ஏலத்திற்கு விடுதல் மற்றும் சட்ட நடவடிக்கை போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியவாறு கடனை மீட்டுக்கொள்வதற்கான உரிய செயல்முறையை நடைமுறைப்படுத்தும். இதன் பின்னணியில், சரியாக விளங்கிக்கொள்ள பின்வரும் அம்சங்கள வலியுறுத்தப்படுகின்றன்.

    A. கடனை மீட்டுக்கொள்வதற்கான ஏனைய அனைத்து வழிகளும் முழுமையாக பயனளிக்காத பட்சத்தில் மாத்திரமே அது தள்ளுபடி செய்யப்படும்.

      B. வங்கியின் செயல்படாத சொத்துக்களின் அளவு கடந்த இரண்டு தசாப்தங்களாக தோற்றுவிக்கப்பட்டவற்றைஃ வகைப்படுத்தப்பட்டவைகளைக் கொண்டுள்ளது.

      C. பொதுத் தளங்களில் சமீபத்தில் கருத்துப் பரிமாறப்பட்டவாறு, கடன்கள் எதுவும் தள்ளுபடி செய்யப்படவில்லை.

மக்கள் வங்கியின் செயல்படாத சொத்துக்களின் அளவானது தொழில்துறையின் சராசரிகளுடன் ஒப்பிடும்போது நல்ல நிலையிலுள்ளது.

வாடிக்கையாளர்களின் வைப்புக்களுக்கு ஈடிணையற்ற பாதுகாப்பை வழங்கும் பொறுப்புள்ள நிதியியல் சேவை வழங்குனராக, மக்கள் வங்கியானது செயல்படாத சொத்துக்களை மீட்டெடுப்பதற்கு மிகவும் முன்னுரிமையளித்துள்ளது.