நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் போதைப்பொருளுடன் மூவர் கைது

Published By: Digital Desk 5

31 May, 2022 | 03:39 PM
image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன்  மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று (30)  இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கிண்ணியா

திருகோணமலை- கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் 1 கிராம் 650 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 22 வயதுடைய கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேலியகொடை

பேலியகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினால் 65 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 32 வயதுடைய மருதானை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். பேலியகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உப்புவெளி

உப்புவெளி -  அந்தன்குளம் பிரதேசத்தில் 1 கிராம் 600 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 45 வயதுடைய உப்புவெளி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2029 நாமல் ஜனாதிபதி ; தமிழர்களின்...

2026-06-13 17:21:32
news-image

மாகாணசபைத் தேர்தலின் சட்ட ,தொழில்நுட்ப சிக்கல்கள்...

2026-06-13 17:20:23
news-image

ஜே.ஆரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்...

2026-06-13 17:03:31
news-image

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியையும் சர்வதேச போட்டித்திறனையும்...

2026-06-13 10:52:00
news-image

பேக்கரித்துறைக்கு இயற்கை விவசாய பொருட்களை பயன்படுத்துவது...

2026-06-13 16:34:27
news-image

செம்மணி புதைகுழி உண்மைகள் தெற்கின் மனசாட்சியைத்...

2026-06-13 15:57:28
news-image

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில்...

2026-06-13 15:22:47
news-image

கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க...

2026-06-13 13:56:01
news-image

எரிபொருள் மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு;...

2026-06-13 14:47:01
news-image

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த வலி நிவாரணி...

2026-06-13 13:50:38
news-image

நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கு ‘சிவப்பு’...

2026-06-13 13:58:45
news-image

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டம்:...

2026-06-13 13:55:50