பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக சவேந்திர சில்வாவும் இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேயும் நியமனம்

Published By: Digital Desk 4

31 May, 2022 | 03:37 PM
image

இலங்கை இராணுவத்தின் 24 ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, லெப்டினன்ட் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்படுவார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, புதிய இராணுவ தளபதிக்கான கடமைகளையும் மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நாளையதினமே பொறுப்பேற்கவுள்ளார்.

அத்தோடு பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சவேந்திர சில்வா இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதோடு, பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக நாளையதினம் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

இந்நிலையில், இரு இராணுவ அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக் கடற்படையின் படகு விபத்து: தொடரும்...

2026-08-16 13:04:58
news-image

ஷங்காய் மாநாட்டிற்கு செல்லும் ஜனாதிபதி அநுர

2026-08-16 08:55:06
news-image

ஆகஸ்ட் 30-இல் சர்வதேச மாநாடு: காணாமல்...

2026-08-16 08:56:43
news-image

அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மகா சங்கத்தினரிடமிருந்து கிடைக்கும்...

2026-08-16 11:34:51
news-image

சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சரை...

2026-08-16 09:28:15
news-image

‘ஸ்பைடர் வுமன்’ என்றழைக்கப்படும் போதைப்பொருள் வியாபாரி...

2026-08-16 08:40:39
news-image

சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி வழி...

2026-08-16 08:39:58
news-image

22 ஆவது திருத்தம் செவ்வாய் பாராளுமன்றில்...

2026-08-16 08:39:12
news-image

இவ்வாண்டில் பொருளாதார வளர்ச்சி 4 -...

2026-08-16 09:24:32
news-image

சொகுசு காரில் மாடுகள் கடத்தல்: ‘ஐஸ்’...

2026-08-16 08:36:01
news-image

கடுவலை பகுதியில் இன்று விசேட போக்குவரத்து...

2026-08-16 10:06:59
news-image

டெங்கு ஒழிப்பிற்கான வோல்பெக்கியா திட்டம்  ஆரம்பம்

2026-08-16 09:57:27