சிறுவர், பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்!

Published By: Digital Desk 4

31 May, 2022 | 01:44 PM
image

சிறுவர் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது சிறுமி பாத்திமா ஆயிஷாவின் மரணம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஒன்றுதிரண்ட சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் உள்ளிட்டவர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீதிவேண்டும் நீதிவேண்டும்.சிறுவர்களை வாழவிடு போன்ற கோசங்களை எழுப்பியவாறு  கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் நீதிகோரிய இந்த கவனயீர்ப்பு போராட்டமானது, அண்மையில் 9 வயது சிறுமியின் கொலை சம்பவம் முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது சிறுமிகளையும், பெண்களையும் காப்பாற்றுவது அரசினதும் சமூகத்தினரும் கடமையாகும், இலங்கையில் சட்ட ஆட்சி முறை நடைமுறைப்படுத்தப்படவில்லை, குற்றவாளிகளை தப்பிக்கவைக்கும் நடைமுறை இலங்கையில் காணப்படுகின்றது.

சட்டத்தரணிகள் நியாயத்தின் பக்கம் இணையவேண்டும், 9 வயது  சிறுமியின் கொலையின் உண்மைத்தன்மை வெளிக்கொண்டுவரவேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கவேண்டும். பெண்கள்,சிறுவர்களுக்கான விசேட நீதிமன்ற விசாரணை முறைமைகள் இலங்கையில் நடைமுறைக்கு வரவேண்டும் என்றும் போராட்டத்தின் இறுதியில் வாசிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

ஆர்ப்பாட்ட பேரணியின் போது கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் போதைப்பொருள் பாவனையின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றது. போதைப்பொருள் வியாபாரிகளுக்கு வழங்கப்படும் தண்டனை மிகக்குறைவாக இருப்பதும் காரணம், சிறுவர்கள் மத்தியில் அதிகளவில் போதைப்பொருள் விதைக்கப்பட்டுள்ளது.

ஒருபக்கம் பட்டிணி வாட்டுகின்றது மறுபக்கம் எதிர்கால சந்ததியினரை வன்முறை வாட்டுகின்றது..இதற்காக சரியான பொறிமுறை உருவாக்கப்படவேண்டும்.

சிறுமிக்கு  நடந்த கொடுமை பாராதூரமானது இலங்கையில் சிறுவர்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளதாக ஜக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் தொடர்பான குழு தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகள் காலத்தில் இவ்வாறன சம்பவம் நடைபெறவில்லை  இதனை இன்று பாராளுமன்றத்தில் பேசுகின்றார்கள்.

இந்த ஆயிசாவுக்கு  நடந்த படுகொலை இலங்கையில் நடந்த முதல் தடவையான சிறுவர் துஸ்பிரயோகம் அல்ல வித்தியா தொடக்கம் இன்றுவரை சிறு  பிள்ளைகள் கொலை செய்யப்படும் வரலாறு இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இதற்கு பிரதான காரணமாக போதைப்பொருள் பாவனை ஆகும்.

இந்த போதைபொருளை ஒழிப்பதற்கு இன்னும் சட்டத்தில் இடம் இல்லை என்றுதான் நாங்கள் கருதுகின்றோம். அனைத்திற்கும் ஆணைக்குழு அமைக்கப்படுகின்றது. ஆனால் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கோ அல்லது போதைப்பொருள் ஒழிப்பதற்கோ ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்படவில்லை.  இதற்கான தனியான ஆணைக்கழுவினை நிறுவி தனியான சட்டத்தினை பாராளுமன்றத்தில் இயற்றி சிறுவர்கள் வாழ்வதற்கு விடுதலையினை பெற்றுக்கொடுக்க அரசிடம் வேண்டுகின்றோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58