(நா.தனுஜா)
அத்தியாவசியப்பொருட்களின் இறக்குமதிக்கு அவசியமான டொலர்கள் வங்கிக்கட்டமைப்பினுள் காணப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், தற்போதைய சவாலான சூழ்நிலையில் வர்த்தக சமூகமும் பொதுமக்களும் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டியது அவசியம் என்றும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை மத்திய வங்கியினால் 30 ஆம் திகதி திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
நிதியமைச்சினால் மே 6 திகதியிடப்பட்டு, மே 20 ஆம் திகதி அமுலுக்குவரும் வகையில் இறக்குமதிகளுக்கான கொடுப்பனவுகளைச் செலுத்துதல் தொடர்பான கட்டுப்பாடுகள் அடங்கிய வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டன.
அதன்படி பொருட்களை இறக்குமதி செய்யும்போது அதற்குரிய கொடுப்பனவு திறந்த கணக்கின் மூலமான கொடுப்பனவு அடிப்படையில் மேற்கொள்ளப்படல் உள்ளிட்ட சில விடயங்களுக்கு மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த நடவடிக்கைகள் உள்நாட்டு வங்கிக்கட்டமைப்பிற்குள் வெளிநாட்டு நாணயத் திரவத்தன்மை நிலையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் மத்திய வங்கியினாலும் அரசாங்கத்தினாலும் முன்னெடுக்கப்பட்ட ஏனைய நடவடிக்கைகளுக்கு உதவியாக அமைந்தன.
இருப்பினும் இறக்குமதிக்கான கொடுப்பனவு முறைமைகள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள மட்டுப்பாடுகள் காரணமாக வெகுவிரைவில் பாரிய உணவுத்தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வர்த்தக சமூகத்தைச்சேர்ந்த பல்வேறு தரப்பினராலும் வெளியிடப்பட்ட கரிசனைகள் மத்திய வங்கியின் அவதானத்திற்குக்கொண்டுவரப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு நிலையில் உணவுப்பொருட்கள் உள்ளடங்கலாக அத்தியாவசியப்பொருட்களுக்கான இறக்குமதியின்போது அதற்கு அவசியமான வெளிநாட்டு நாணயம் நாட்டின் வங்கிக்கட்டமைப்பிற்குள் காணப்படுவதை மத்திய வங்கி உறுதிப்படுத்தும் என்பதை நாம் மீளவலியுறுத்துகின்றோம்.
அதுமாத்திரமன்றி இறக்குமதிகளுக்கான கொடுப்பனவுகளைச் செலுத்துதல் தொடர்பில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்கான பற்றாக்குறையை ஏற்படுத்தாதிருப்பதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளும் மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசியப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அவசியமான வசதிகளை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி வங்கிகட்டமைப்புக்களுடன் மத்திய வங்கி கலந்துரையாடல்களை முன்னெடுத்துவருகின்றது.
அதேபோன்று அத்தியாவசியப்பொருட்களை இறக்குமதி செய்யும் தரப்பினருடனும், வர்த்தக அமைப்புக்களிடன் பிரதிநிதிகளுடனும் மத்திய வங்கி பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
மேலும் அத்தியாவசியப்பொருள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தக அமைப்பினருடன் அண்மையில் நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது, தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கத் தயாராக இருப்பதாக அவர்கள் மத்திய வங்கியிடம் உறுதியளித்தனர்.
சுங்கத்திலுள்ள அத்தியாவசியப்பொருட்களை விடுவிப்பதற்கு மத்திய வங்கி, இலங்கை சுங்கத்திணைக்களம், வர்த்தக அமைச்சு ஆகிய கட்டமைப்புக்கள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன.
எனவே இவ்வாறானதொரு சவாலான சூழ்நிலையில் வர்த்தக சமூகமும் பொதுமக்களும் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM