கொழும்பு மாநகரசபை மாநகர ஆணையாளருக்கு எதிராக அதிருப்தி பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம்

By Vishnu

30 May, 2022 | 08:26 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

கொழும்பு மாநகர சபை மாநகர ஆணையாளரின் நடவடிக்கைகளுக்கு எதிரான அதிருப்தி பிரேரணை ஆளும் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மாநகரசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மாநகர ஆணையாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவருக்கு எதிரான அதிருப்தி பிரேரணை சமர்ப்பிக்க கொழும்பு மாநகரசபையின் மாநகர உறுப்பினர்கள் 30 உறுப்பினர்களின் கையெழுத்துடன் விசேட கூட்டமொன்றை கூட்டுமாறு தெரிவித்து விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய கொழும்பு மாநகர சபையின் விசேட கூட்டம்  மேயர் ராேசி சேனாநாயக்க தலைமையில் இன்று 30 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கூடியது.

இதன்போது ஆளும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் மஹேந்திர சில்வா மாநகர ஆணையாளரின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்து பிரேரணை ஒன்றை சமர்ப்பித்தார்.

அதில்  மாநகர ஆணையாளர் ரோஷினி திஸாநாயக்க, கொழும்பு மாநகரசபையினால் மேற்கொள்ளப்படுகின்ற சேவைகளை தகுந்த முறையில் மேற்கொள்வதைனை தடுத்து பொதுச்சபையினால் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களை நடைமுறைப்படுத்துதலை நிறுத்துவதுடன் வேறு வகையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தடைகளை ஏற்படுத்தி வருகின்றார். இவரின் நடவடிக்கை காரணமாக கொழும்பு மாநகர சபையானது மக்களின் அதிருப்திக்கு உள்ளாகி வருகின்றதை நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது.

குறிப்பாக மாநகரசபை சட்டங்களினால் மாநகர சபைக்கு கிடைக்கப்பெறுகின்ற அதிகாரங்களின் படி பணிகள் அல்லது வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும்போது அதனை  சவாலுக்குட்படுத்தி பொது மக்களுக்கு ஆற்றும் சேவைகளை தடுத்தல் மற்றும் சேவைகள் வழங்குவதனை இல்லாதொழிப்பதற்கு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அத்துடன் மாநகர சட்டத்தின் கீழ் நடத்தப்படுகின்ற பொதுவான, விசேட பொதுச் சபைக்கூட்டம் மற்றும் நிதி தொடர்பான நிலையியற் குழுவின் கூட்டங்களுக்கு பங்குபற்றாமல் தமது கடமைகளில் இருந்து விலகி வருகின்றார்.

அதேபோன்று பொதுச்சபையின் அனுமதியின்றி சபையினுடைய நிதியத்திள் பணத்தினைப் பயன்கடுத்தி தனது தனிப்பட்ட நலனுக்காக செலவழித்து வந்துள்ளார். கொழும்பு மாநகர சபையில் சேவைகளை பெற்றுக்கொள்ளும் மக்களுக்கு பயனுருதிவாய்ந்த சேவைகளை வழங்கும் நோக்கில் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட பல வேலைத்திட்டங்கள் தொடர்பாக மேல்மாகாண ஆளுநருக்கு பிழையான தகவல்களை வழங்கி அந்த வேலைத்திட்டங்களை நிறுத்த நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.

எனவே மாநகர ஆணையாருடன் தொடர்ந்து மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை முன்னெடுக்க முடியாது. அவரை கொழும்பு மாநகர சபைக்கு வெளியே இடமாற்றம் செய்யுமாறு மேல் மாகாண ஆளுநருக்கு வேண்டுகோள் விடுக்கவேண்டும் என்றார்.

அதனைத்தொடர்ந்து பிரேரணையை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் டோனி ரம்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ராேய் போகாவத்த ஆகிய இருவருமே எழுந்து வழிமொழிந்தனர். இதன்போது உறுப்பினர் ராேய் போகாவத்த தெரிவிக்கையில், கொழும்பு மாநகரசபை மாநகர ஆணையாளர் ஒருவருக்கு அதிருப்தி பிரேரணை கொண்டுவருவது வரலாற்றில் முதல் தடவையாகும். மாநகர ஆணையாளரின் நடவடிக்கைகளுக்கு எதிராக பல தடவைகள் மேல் மாகாண ஆளுநருக்கு முறைப்பாடு செய்திருக்கின்றோம். ஆனால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஆளுநர் வியத்மக அணியின் ஆலாேசனைக்கமையவே மேற்கொண்டு வருகின்றார். அவர் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்று எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றார் என்றார்.

அதனைத்தொடர்ந்து பொதுஜன பெரமுன உறுப்பினர் எல்.ஆர்.ஸ்டீபன் தெரிவிக்கையில், ஆணையாளரின் நடவடிக்கை தொடர்பாக முன்னாள் பிரதமரிடம் முறையிட்டு அவரை இடமாற்றம் செய்யுமாறு கேட்டுக்கொண்டிருந்தோம். ஆனால் அவர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதேபோன்று மேல் மாகாண ஆளுநரிடமும் முறையிட்டோம் அவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநகர ஆணையாளரின் நடவடிக்கைகள் மாநகர சட்டத்துக்கு முரணாகவே அமைந்திருக்கின்றன என்றார்.

அதனைத்தொடர்ந்து மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் ஹேமந்த வீரகோன், ஜனநாயக மக்கள் முன்னணி உறுப்பினர் பிரியானி குணவர்த்தன,ஆகியோரும் மாநகர ஆணையாளரின் நடவடிக்கைக்கு எதிராக கருத்து தெரிவித்துடன் பிரேரணையை ஆதரிப்பதாகவும் தெரிவித்தனர்.

இறுதியாக மேயர் ராேசி சேனாநாயக்க தெரிவிக்கையல்,

மாநாகர ஆணையாளர் சட்டத்தரணியாக இருந்தும் சட்டத்தை மீறியே செயற்பட்டுள்ளார். அதனால் அவரை இடமாற்றி புதிய ஆணையாளர் ஒருவரை நியமிக்கும் வரை மாநகரசபையின் பிரதி ஆணையாளரை பதில் ஆணையாளராக நியமிக்குமாறு ஆளுநரை கேடுக்கொள்வதாக குறிப்பிட்டார். அதனை அடுத்து மாநகர ஆணையாளருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட அதிருப்தி பிரேரணை ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர் அனைவரதும் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கட்டுமானத் துறையில் ஒரு தேசியக் கொள்கை...

2022-11-30 10:06:51
news-image

சட்டவிரோத குடியேற்ற வாசிகளை அவுஸ்திரேலியா அரசாங்கம்...

2022-11-30 09:09:51
news-image

உள்ளூராட்சி, மாகாணசபை தேர்தல்களை தாமதமின்றி நடத்தவேண்டும்...

2022-11-30 09:02:29
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-11-30 08:45:56
news-image

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும்!

2022-11-30 08:50:50
news-image

உள்நாட்டில் பயிற்சிகளைப் பெற்று வெளிநாடு செல்லும்...

2022-11-29 21:43:22
news-image

சுகாதாரத்துறை ஆபத்துக்குள் தள்ளப்படும் நிலை :...

2022-11-29 21:48:08
news-image

பாராளுமன்ற செயற்பாடுகளை புறக்கணிப்போம் - லக்ஷமன்...

2022-11-29 21:56:33
news-image

இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தை சீரழிக்க வேண்டாம்...

2022-11-29 21:58:30
news-image

அதிகாரப் பகிர்வுக்கு ஆளுங்கட்சி இணங்குமா ?...

2022-11-29 16:21:19
news-image

பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சித்த  குற்றச்சாட்டில்...

2022-11-29 22:16:06
news-image

மருந்து உற்பத்தி வழிகாட்டலில் மாற்றத்தை ஏற்படுத்தினால்...

2022-11-29 16:06:19