தமிழக மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் : அ.தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்கள் மனு தாக்கல்

Published By: Vishnu

30 May, 2022 | 04:27 PM
image

தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் , தர்மர் ஆகிய இருவரும், காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் ஆகியோரும் இன்று 30 ஆம் திகதி திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்திலிருந்து காலியாகும் ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் மாதம் 10 ஆம் திகதியன்று தேர்தல் நடைபெறுகிறது.

தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சியின் வலிமையின் அடிப்படையில் திமுக கூட்டணிக்கு நான்கு இடங்களும், அதிமுக கூட்டணிக்கு இரண்டு இடங்களும் கிடைக்கும்.

திமுக கூட்டணியின் சார்பில் திமுக மூன்று இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஓரிடத்திலும் போட்டியிடுகிறது.

திமுக சார்பில் தஞ்சை கல்யாணசுந்தரம், கே. ஆர். என். ராஜேஷ்குமார், ஆர். கிரிராஜன் ஆகிய மூவர் போட்டியிடுகிறார்கள். காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் போட்டியிடுகிறார். அவர் இன்று சென்னையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்ற ஆவல் அனைவரிடத்திலும் ஏற்பட்டது. இந்நிலையில் கட்சியின் இரட்டை தலைமையான ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கலந்து ஆலோசித்து, முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் மற்றும் என். ராமர் ஆகியோர்களை வேட்பாளராக அறிவித்தனர். அவர்கள் இருவரும் இன்று சென்னை கோட்டையில் உள்ள தலைமை செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்க கடற்படைகள் ஈரானை நோக்கி நகர்த்தப்படுவதால்...

2026-01-24 13:54:37
news-image

அமெரிக்கா முழுவதும் கடும் பனிப்புயல் –...

2026-01-24 13:42:11
news-image

இந்தோனேசியாவில் கண்காணிப்பு விமானம் மலை மீது...

2026-01-24 12:00:03
news-image

பாகிஸ்தானில் திருமண நிகழ்வில் தற்கொலைத் தாக்குதல்:...

2026-01-24 11:36:52
news-image

இந்தோனேஷியாவில் மண்சரிவு : ஏழு பேர்...

2026-01-24 11:13:28
news-image

பாராளுமன்றத்தை கலைத்தார் ஜப்பான் பிரதமர் :...

2026-01-23 13:31:08
news-image

பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் பயணித்த கப்பல் விபத்து...

2026-01-23 12:26:05
news-image

டிக்டொக் தடையிலிருந்து தப்பியது : அமெரிக்க...

2026-01-23 09:44:53
news-image

ஜப்பானில் உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையம்...

2026-01-23 10:16:18
news-image

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு ; மூன்று...

2026-01-22 15:52:45
news-image

உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறியது...

2026-01-22 14:59:47
news-image

பீஜிங், டெல்லி, நியூயோர்க் உள்ளிட்ட நகரங்கள்...

2026-01-22 13:18:55