மக்கள் வங்கி உண்மையில் நாட்டுக்காக அர்ப்பணித்துள்ள வங்கி

Published By: Digital Desk 5

30 May, 2022 | 04:29 PM
image

மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொதுமுகாமையாளர் ரஞ்சித் கொடிதுவக்கு உலகின் உயர் அங்கிகாரம் பெற்ற பேங்கர் இதழில் தொடர்ச்சியாக 2018,2019,2020 மற்றும் 2021 ஆண்டுகளில் உலகின் சிறந்த 1000 வங்கிகளுள் இடம்பெற்றுள்ளது என்பதுடன் இந்நாட்டின் மிகப்பெரிய நிதிச் சேவை வழங்குனர்களாக மக்கள் வங்கி விளங்குகின்றது.

மக்கள் வங்கியானது இதுவரை வந்துள்ள பயணம், நிகழ்கால மற்றும் எதிர்கால இலக்கு என்பவை தொடர்பாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரிஃ பொது முகாமையாளர் ரஞ்சித் கொடிதுவக்கு அவர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலே இது:

மக்கள் வங்கியின் தற்போதைய நிலைப்பாடு மற்றும் நிலைத்தன்மை தொடர்பாக குறிப்பிடுவீர்களேயானால்…

பொது மக்களுக்கு வங்கி வசதிகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் வங்கியானது இன்றளவில் தனிநபர் மையப்படுத்தப்பட்ட வங்கியாக வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப பாரிய அளவில் விஸ்தரிக்கப்பட்ட நிதிச் சேவைகள் மற்றும் விஷேட வங்கி வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்றளவில் மக்கள் வங்கியானது இலங்கையில் முன்னணி வகிக்கும் அனுமதி பெற்ற வணிக வங்கியாக விளங்குவதுடன் நாடு முழுவதும் பரந்துள்ள 742 கிளைகள் மற்றும் சேவைநிலையங்களுடன் 8000க்கும் அதிகமான ஊழியர்களையும் கொண்டுள்ளது.

மக்கள் வங்கியுடன் 14 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் காணப்படுவதுடன், இது இந்நாட்டில் மிகவும் அதிகமான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் கொண்டுள்ள வங்கியாகவும் திகழச்செய்கிறது. 

மக்கள் வங்கியின் சொத்து மதிப்பு ரூ. 2.6 ட்ரில்லியன் வரை உயர்ந்துள்ளது. வைப்புத் தொகை ரூ. 2.0 ட்ரில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

தேறிய கடன் மற்றும் முற்பணம் ரூ. 1.8 ட்ரில்லியன் ஆகும். கடந்த 2021ஆம் ஆண்டில் வரிக்கு முன்னரான இலாபமாக ரூ.30.4 பில்லியன் தொகையைக் கண்டு சாதனைப் படைத்தோம். வரிக்கு பின்னரான இலாபமாக ரூ. 23.7 பில்லியனைக் கண்டோம்.

மக்கள் வங்கி தொடர்ச்சியாக இலங்கை நிதித்துறைக்கு புதிய அறிமுகங்கள் பலவற்றை செய்தீர்கள் அல்லவா?

தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு தேசிய மொழிகளிலும் வங்கிக் கருமங்களை மேற்கொண்ட முதலாவது வணிக வங்கியாகவும் மக்கள் வங்கி திகழ்கின்றது.

அதுவரையில் ஆங்கிலத்தில் மட்டுமே அச்சிடப்பட்ட காசோலை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிலும் அச்சிட்ட முன்னோடியாகவும் திகழ்கிறது.

அதே போல் வங்கிச் சட்டத்தின் கீழே தங்க நகை அடகுச்சேவையையும் 1962ஆம் ஆண்டில் மக்கள் வங்கி தொடங்கியது. இதன் மூலம் கிராமங்களிலும் நகரங்களிலும் இருந்த வட்டிக்காரர்களில் நம்பியிருந்த மக்களை காப்பாற்ற முடிந்தது. 

அதே போல் 1993ஆம் ஆண்டு உலக மகளிர் தினத்துக்கு முதன்முறையாக இலங்கையின் வணிக வங்கியொன்றாக பெண்களுக்காகவே ‘வனிதா வாசனா’ சேமிப்புக் கணக்கினை அறிமுகப்படுத்தியது.

மேலும் இலங்கையின் மாணவ சமுதாயத்தின் எதிர்காலத்தினை கருத்திற்கொண்டு அவர்களை கட்டியெழுப்பவும் பாதுகாத்திடவும் மக்கள் வங்கியானது 1996 ஆம் ஆண்டில் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ‘சிசு உதான’ கணக்கு அறிமுகக்படுத்தி வைக்கப்பட்டது.

இன்றளவும் இலங்கையில் அதிகமான பிள்ளைகளின் சேமிப்புக் கணக்குகள் மக்கள் வங்கியிடமே உள்ளன. 

புதிய உலகுக்கு ஏற்ற வகையில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வசதியான பாதுகாப்பான மற்றும் வினைத்திறன் மிக்க வங்கி வசதிகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துடன் 2015ஆம் ஆண்டு டிஜிட்டல் வங்கியியல் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

அந்த வகையில் வங்கியின் கீழ் மட்டத்திலிருந்து உயர் மட்டம் வரையிலான அனைத்து செயற்பாட்டு பிரிவுகளும் உள்ளடங்கும் வகையில் மொத்த செயற்பாட்டு முறைகளும் உள்ளடங்கும் வகையில் அனைத்து மக்களுக்குமான முழுமையான திட்டமொன்றை செயற்படுத்திட நடவடிக்கை எடுத்துள்ள நாட்டின் முதலாவது நிறுவனமாக மக்கள் வங்கி விளங்குகின்றது. 

மக்கள் வங்கியை தாபிக்க முக்கிய நோக்கம், இந்நாட்டின் விவசாயிகள் மற்றும் சிறிய மற்றும் மத்திய அளவிலான வணிகங்களை கட்டியெழுப்புதல் ஆகும். வணிக வங்கியாக ஈடுபடுவதுடன் மக்கள் வங்கி தமது முக்கிய நோக்கத்தினை மறந்துள்ளது என எவரேனும் கூறினால்…

நாம் அண்மைக்காலத்தினைக் கருத்திற் கொண்டால், கிராமிய அபிவிருத்தி, சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோருக்கு உதவிடும் நோக்கத்துடன் மற்றும் பெண் தொழில்முனைவேரை வலுவூட்டிடும் நோக்கத்துடன் வங்கி முதலீடுகளை மேற்கொண்டது.

2021 டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலத்தினுள் பல்வேறு கடன் வசதித் திட்டங்கள் மூலம் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களுக்கு ரூ. 63.0 பில்லியனுக்கும் அதிகமான கடன்தொகை பெற்றுக் கொடுத்ததுடன் விவசாயம், தகவல் தொழில்நுட்பம்.

விநியோகம், தயாரிப்பு, தேயிலை மற்றும் சுற்றுலாத் தொழிற்துறை மீண்டும் கட்டியெழுப்பிடு; நோக்கத்தடன் இவ்வசதிகள் மூலம் ரூ. 1.9 பில்லியன் தொகை பெற்றுக் கொடுப்பதானதும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

சிறுதோட்ட விவசாயிகளின் பங்காளிகளுடன் கைகோர்த்ததன் மூலம் ரூ. 1.0 பில்லியன் தொகையிலான ஆரம்ப திட்டத்தின் மூலம் 5000 விவசாயிகளுக்கான குறைந்த வட்டியைக் கொண்ட கடன் வசதித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. 

தேசிய பசளை உற்பத்திக்கு உதவிடும் நோக்கத்துடன் ‘சாரபூமி’ கடன்வசதித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் பெண் தொழில்முனைவேரை ஊக்குவித்திடும் நோக்கத்துடன் ரூ.533.5 மில்லியன் தொகை ஒதுக்கப்பட்டது.

அதே போல் விவசாய மற்றும் கைப்பணி தொழிற்துறையில் சுயதொழில் செய்வோருக்காவும் வங்கியானது கடன் ஆலோசனைத் திட்டங்களை முன் வைத்தது.

தகவல் தொழில்நுட்பத்துறைக்காக நாட்டில் முதலீடு செய்வதற்கு உதவிடும் நோக்கத்துடன் வங்கியானது ரூ. 6.0 பில்லியன் தொகையை பெற்றுக்கொடுத்ததுடன் அதில் ரூ.750.0 மில்லியன் தொகை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட கடன்களாக வீடமைப்பு மற்றும் கட்டட அபிவித்தி தொழிற்துறையை கட்டியெழுப்பிடும் நோக்கத்துடன் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் ரூ. 185.8 பில்லியனுக்கும் அதிகமான தொகையை 10,000க்கும் அதிகமான வீட்டுக் கடன் வசதியாக வழங்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக 2021ஆம் ஆண்டின் இறுதியில் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்று ஊனமுற்ற வீரர்களுக்காக ரூ. 5.5 பில்லியன் தொகை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதுடன் ரூ. 68.5 பில்லியன் தொகை அரச ஓய்வு பெற்றோருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. 

கலைஞர்கள் மற்றும் அத்தோடு தொடர்புடைய தொழிற்துறையில் பணிபுரிவோருக்கு வங்கியானது ரூ. 550.0 பில்லியன் தொகை பணத்தை வழங்கியுள்ளது.

மேலும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக ஆண்டு முழுவதும் பெற்றுக் கொள்ளக்கூடிய கணணி ஒன்றை கொள்வனவு செய்துகொள்வதற்காக ரூ. 350.5  மில்லியன் தொகை கடன் வசதியாக பெற்றுக் கொடுக்கப்பட்டது.

அந்நிய செலாவணி நாட்டுக்கு கொண்டு வருபவர்களுக்காக வங்கி எடுத்துள்ள நடவடிக்கை என்ன?

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் மற்றும் எந்தவொரு நபருக்கும் உலகத்தில் எந்தவொரு நாட்டிலிருந்தும் பணத்தை அனுப்பிடக்கூடிய வசதி காணப்படுவதுடன் நாடு முழுவதும் அமைந்துள்ள எமது 741 கிளை வலையமைப்பின் ஊடாக அப்பணத்தைப் பெற்றுக் கொள்ளவும் முடியும்.

மேலும் வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கையர்களுக்காக Pநழிடந’ள சுநஅவைவயnஉந வாசி கோடி வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் சீட்டிழுப்பு பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது.

அதே போல் வெளிநாடு செல்லும் பணியாளர்களுக்கு வெளிநாடு செல்வதற்காக மக்கள் வங்கியினால் கடன் வசதி பெற்றுக்கொடுப்பதுடன் அங்கு வேலை செய்யும் பொழுதும் கடன் வசதிகள் பெற்றுக் கொடுப்பதும் இதன் விஷேடத்துவம் ஆகும்.

இதற்கு மேலதிகமாக வெளிநாட்டு பணியாளர்கள் நம்நாட்டுக்கு பணம் அனுப்பும் போது வங்கி அல்லது முறையான வழிகளில் பணம் அனுப்புவதை வலுவூட்டுவதன் மூலம் திடீர் விபத்துக்கள்ஃஆயுள் காப்புறுதி அனுகூலங்கள், வட்டிகுறைந்த கடன்வசதிச் சேவைகள் உள்ளடங்கலாக வெளிநாட்டு பணியாளர்களை வலுவூட்டிடும் பக்கேஜ் ஒன்றினை அறிமுகபப்டுத்தவும் நாம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளோம். 

வங்கி முறைமையின் நிலைத்தன்மை பற்றிய உங்கள் கருத்து மற்றும் வாடிக்கையாளர்கள் அரச வங்கியுடன் கொடுக்கல் வாங்கல் செய்திடும் போது கிடைத்திடும் விசேட அனுகூலங்கள் மற்றும் சமூகத்துக்கு கிடைக்கும் அனுகூலங்கள் எவை?

அனைத்து வங்கிகளுக்கும் வலுவான நோக்கம் இருப்பதோடு, இந்நாட்டு வங்கிமுறைமையானது தொடர்ச்சியாக மத்திய வங்கியின் மேற்பார்வைக்கு உட்படுகின்றது.

அதே போல் இந்நாட்டின் மிகப்பெரிய பொறுப்பு அரச வங்கிகளுக்கே உண்டு. இந்நாட்டு வங்கி முறைமையானது உலகிலுள்ள மிக உயர்ந்த தரநிர்ணயங்களுக்கு அமையவே செயற்படுகின்றது.

அதே போல் அரச வங்கியிடம் ஒப்பற்ற நிலைத்தன்மை காணப்படுகின்றது. அதனால் உங்கள் வைப்புக்களுக்கு உச்ச பாதுகாப்பு கிடைக்கப்பெறுகிறது.

இந்நாட்டின் மிகப்பெரிய வங்கிக் கிளை வலையமைப்பு காணப்படுவதால் நீங்கள் எங்கிருந்தாலும் வங்கி நடவடிக்கைகளை மிகவும் இலகுவாக செய்து கொளள் முடியும். 

அதே போல் தனிப்பட்ட உரிமைத்துவம் இல்லையாதலால் அரச வங்கிகளின் இலாபமானது மீண்டும் அரசாங்கத்தின் ஊடாக நாட்டின் அபிவிருத்திக்கே பயன்படுத்தப்படுகின்றது. அரசின் மற்றும் மத்திய வங்கியின் பின்னூட்டலும் அரச வங்கிக்கு கிடைக்கிறது. 

இறுதியாக ஏற்றுமதி, இறக்குமதி சேவைகள் ஊடாக மக்கள் வங்கி இந்நாட்டுக்கு பெற்றுக்கொடுக்கும் பங்களிப்பு என்ன?

மக்கள் வங்கி பல உலக நாடுகளுடன் 900 வங்கிகளுடன் வெற்றிகரமாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டு வருகிறது.

அதே போல் மக்கள் வங்கி தனியார் மற்றும் அரச உரிமையைக் கொண்ட நிறுவனங்களுக்கு கடன்பத்திரங்களை மற்றும் கடன்பிணைகளை வழங்குவதன் மூலம் நாட்டில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளுக்காக மாபெரும் ஒத்துழைப்பினை வழங்குகின்றது.

விசேடமாக நாட்டுக்கு அத்தியவசிய பொருட்களான எரிபொருள், மருந்துகள், கேஸ் போன்றவற்றை கொண்டு வரும் பொழுது மக்கள் வங்கி அதற்கான கடன்பத்திரங்களை வழங்குவதன் மூலம் இந்நாட்டு மக்களின் வாழ்வினை சுமுகமாக கொண்டு செல்வதற்கு தேவையான நிதிச் சேவைகளை வழங்குகின்றது. 

நான் முதலில் கூறியதைப் போல மக்கள் வங்கியானது இலாப நோக்கமற்ற நிதி நிறுவனம் என்பதனால் தொடர்ந்தும் இந்நாட்டு மக்களினதும் தேசத்தின் அபிவிருத்திக்காகவும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

இந்நாட்டு பொது மக்களுடன் இணைந்துள்ள வங்கியாக மக்கள் வங்கி எதிர்பாலத்திலும் தமது பணியை மேற்கொள்ளும்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58