பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து விடுமுறையில் : மேல் மாகாணம் பலிஹக்காரவின் பொறுப்பில்

Published By: Digital Desk 4

30 May, 2022 | 04:33 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

 

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் 14 நாட்கள் விடுமுறையில் சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன. 

 

போதைப்பொருள் கடத்தலில் சம்பாதிக்கப்பட்ட சொத்துக்கள் அரச உடமையாக்கப்படும்: தேசபந்து  தென்னகோன் | Virakesari.lk

இந் நிலையில் குறித்த 14 நாட்களுக்கு, தற்காலிகமாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக  டி.ஜே. பலிஹக்கார பதில் கடமைகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.

 கடந்த மே 9 ஆம் திகதி மைனா கோ கம, கோட்டா கோ கம மீது அரசாங்க ஆதரவு போராட்டக் காரர்கள் நடாத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அதனை தடுக்காமை தொடர்பில் தேசபந்து தென்னகோன் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

 இது தொடர்பில் தேசபந்து தென்னகோனை சாட்சி இருப்பின் கைது செய்யவும், உடனடியாக மேல் மாகாணத்துக்கு வெளியே இடமாற்றவும் சட்ட மா அதிபர் சி.ஐ.டி. மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனையளித்திருந்தார்.

 எனினும்  அந்த ஆலோசனைகள் பிரகாரம் எதுவும் நடக்காத நிலையில், தேசபந்து தென்னகோன் இடமாற்றம் செய்யாமை தொடர்பில்  நாளைமறுதினம் முதலாம் திகதி விளக்கமலிக்குமாறு  பொலிஸ்  மா அதிபருக்கு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 இவ்வாறான பின்னணியிலேயே தேசபந்து தென்னகோன் 14 நாட்கள் விடுமுறையில் சென்றுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது ; ஸ்ரீலங்கன்...

2025-03-21 15:26:30
news-image

மது போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்ற...

2025-03-21 15:48:13
news-image

15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்...

2025-03-21 15:24:44
news-image

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய 10...

2025-03-21 14:42:49
news-image

ஜேர்மனிய பெண்ணின் வேட்பு மனு நிராகரிப்பு 

2025-03-21 15:05:25
news-image

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை...

2025-03-21 14:03:11
news-image

ஹிம்புல்கொட காணி மோசடியுடன் சிரந்தி ராஜபக்ஷவுக்கு...

2025-03-21 15:41:16
news-image

சிரேஷ்ட பிரஜைகளின் 10 இலட்சத்துக்கும் குறைவான...

2025-03-21 15:07:09
news-image

மது அருந்திய போது நண்பரின் கை...

2025-03-21 13:23:49
news-image

மனித விற்பனை, துஷ்பிரயோகத்தை தடுக்க சிறுவர்கள்...

2025-03-21 13:05:35
news-image

அமைதியான இந்து சமுத்திர வலயத்திற்காக இலங்கை...

2025-03-21 13:19:00
news-image

யாழில் வேட்பு மனுத் தாக்கலின் போது...

2025-03-21 13:02:16