ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இலங்கையில் நடத்த தொடர்ந்தும் முயற்சி

Published By: Vishnu

30 May, 2022 | 02:58 PM
image

(நெவில் அன்தனி)

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை இலங்கையில் நடத்துவதற்கு அனைத்து முயற்சிகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) பொதுச் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்தார்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி வேறொரு நாட்டில் நடத்தப்படும் என கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர்பான இறுதித் தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை என்றார்  அவர்.

இன்னும் சில தினங்களில் அவுஸ்திரேலியாவின் மூவகை கிரிக்கெட் அணிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளன. 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடர், 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆகியவற்றில் இலங்கையை அவுஸ்திரேலியா எதிர்த்தாடவுள்ளது.

இந்த மூன்று தொடர்களையும் நாங்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்தால் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்துவதில்     எவ்வித சிக்கலும் ஏற்படாது என நம்புவதாக மொஹான் டி சில்வா தெரிவித்தார்.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் தகுதிகாண் நாடு ஒன்றுமாக 6 நாடுகள் பங்குபற்றும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர்  மாதம்    11ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. அதற்கு முன்பதாக தகுதிகாண் சுற்று ஆகஸ்ட் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அவுஸ்திரேலியாவில் இந்த வருட இறுதியில் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவிருப்பதால் இம் முறை ஆசிய கிண்ண கிரிக்கெட் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியாக நடத்தப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35