அட்டலுகம சிறுமி கொலை - பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது : 29 வயது இளைஞர் கைது 

Published By: Digital Desk 4

30 May, 2022 | 02:39 PM
image

பண்டாரகம அட்டலுகம பிரதேசத்தில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் 9 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் 29 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (27) தனது வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பாததால் குழந்தை காணாமல் போனதாக பெற்றோரால் பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது.

பண்டாரகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததைத் தொடர்ந்து குழந்தையின் சடலம் மறுநாள் (28) அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் இருந்து மீட்கப்பட்டது.

சிறுமி வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸ் குழுக்கள், சிறுமி தனது வீட்டிலிருந்து 150 மீற்றர் தொலைவில் சி.சி..டிவி கெமராக்கள் இல்லாத நிலையில் சிரமத்தை எதிர்கொண்டதாக தெரியவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மேலதிக விசாரணைகளின் மூலம் அட்டாலுகம பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ராமண்ய பீடத்தின் மகா நாயக்க தேரரை...

2024-10-05 17:32:49
news-image

இலங்கை போன்ற அண்டை நாடுகள் இந்தியாவுக்கு...

2024-10-05 17:24:31
news-image

அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரரை சந்தித்து...

2024-10-05 17:21:24
news-image

14 வயது சிறுமிகள் இருவர் பாலியல்...

2024-10-05 17:12:37
news-image

வெலிகந்தையில் மாடுகள் திருட்டு ; சந்தேக...

2024-10-05 16:36:58
news-image

பெண் வேட்பாளர்களை அடையாளம் காணுவதில் கடினமாக...

2024-10-05 16:35:02
news-image

எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படட...

2024-10-05 16:37:16
news-image

புத்தளம் - சிலாபம் வீதியில் விபத்து...

2024-10-05 16:26:30
news-image

குச்சவெளியில் மக்களின் விவசாய நிலங்களை தொல்பொருள்...

2024-10-05 17:29:49
news-image

சிறையிலுள்ள கணவனுக்கு தேங்காய் சம்பலில் போதைப்பொருளை...

2024-10-05 16:00:33
news-image

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூட்டணியாக கேஸ்...

2024-10-05 15:37:37
news-image

பியூமி ஹன்சமாலியின் சொகுசு வாகனம் தொடர்பில்...

2024-10-05 16:24:12