விமலுக்கு எதிரான தும்முல்லை வழக்கு ஆகஸ்ட் வரை ஒத்தி வைப்பு

By T Yuwaraj

30 May, 2022 | 02:24 PM
image

( எம்.எப்.ப். பஸீர்)

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தினம், வீதியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதன் ஊடாக பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கின்  விசாரணைகள் எதிர்வரும் ஆகஸ்ட் 29 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  

Articles Tagged Under: விமல் வீரவன்ச | Virakesari.lk

' தும்முல்லை வழக்கு ' என பரவலாக அறியப்படும் இந்த வழக்கு இன்று ( 30)  விசாரணைக்கு வந்த போது, இதற்கான உத்தரவை   கொழும்பு  பிரதான நீதிவான் நனத்தன அமரசிங்க பிறப்பித்தார்.

கறுவாத்தோட்டம் பொலிஸாரால் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில்,  சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, ஜயந்த சமரவீர, மொஹமட் முஸம்மில், வீரகுமார திசாநாயக்க, பியசிறி விஜேநாயக்க மற்றும் ரொஜர் செனவிரத்ன ஆகியோர்   பிணையில் உள்ள நிலையில் நேற்று மன்றில் பிரசன்னமாகினர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி, அப்போதைய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்  செய்த் ராட் அல் ஹூசைனின் இலங்கை விஜயத்தின் போது, தும்முல்லை பகுதியில்  வீதியை மறித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right