நல்லூர் திருவிழாவையொட்டி நாட்காட்டி அடங்கிய காளாஞ்சி யாழ். மாநகர சபையினருக்கு கையளிப்பு

Published By: Vishnu

30 May, 2022 | 02:56 PM
image

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ள நிலையில், யாழ் மாநகரசபையினருக்கு ஆலய சம்பிரதாய முறைப்படி இன்றைய தினம் 30 ஆம் திகதி திங்கட்கிழமை பெருவிழா நாட்காட்டி அடங்கிய காளாஞ்சி ஆலயத்தினரால் கையளிக்கப்பட்டது.

நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு,  ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்தல், வீதித் தடைகள் அமைத்து சீரான போக்குவரத்துக்கு வழிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் யாழ் மாநகரசபையினருக்கு இவ்வாறு ஆலய சம்பிரதாய முறைப்படி பெருவிழா நாட்காட்டி அடங்கிய காளாஞ்சி ஆலயத்தினரால் கையளிக்கப்பட்டது.

இந்த வைபவத்தின் போது பாரம்பரிய முறைப்படி யாழ் மாநகரசபை வளாகத்தில் வாழை, தோரணங்கள் கட்டி அலங்காரம் சிறப்பாக அமையப்பெற்றிருந்தது.

படங்கள் – ஐ.சிவசாந்தன்  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈ.எஸ்.எம். சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்...

2025-03-17 16:03:10
news-image

எழுத்தாளர் தியா காண்டீபனின் “அமெரிக்க விருந்தாளி”...

2025-03-17 14:44:08
news-image

மூதூர் சிவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமூக...

2025-03-17 14:41:55
news-image

நுவரெலியா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட 103வது பொன்னர்...

2025-03-16 14:09:26
news-image

இந்திய எழுத்தாளர் சந்திரசேகரத்தின் “இனிய நந்தவனம்...

2025-03-16 13:03:09
news-image

காரைக்கால் அம்மையார், திருவள்ளுவர் குருபூசை தின...

2025-03-16 12:28:58
news-image

கல்முனை அல் - அஸ்கர் வித்தியாலய...

2025-03-16 11:45:14
news-image

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் நினைவுதினம்

2025-03-15 14:26:14
news-image

கபித்தாவத்தை ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி ஆலய...

2025-03-15 18:13:16
news-image

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த...

2025-03-15 10:53:21
news-image

கொழும்பு பெளத்த கலாச்சார நிலையத்தில் பகவத்...

2025-03-15 02:52:36
news-image

யாழ். பத்திரிசியார் கல்லூரியின் 175வது ஆண்டின்...

2025-03-14 17:53:29