தமிழக மக்களால் அனுப்பிவைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் யாழில் விநியோகம்

Published By: Digital Desk 5

30 May, 2022 | 09:32 PM
image

யாழ்ப்பாணக் குடா நாட்டிற்கான தமிழக நிவாரணப் பொருட்கள் ரயிலில் யாழ்ப்பாணம் எடுத்து வரப்படுவரப்பட்டு   உடனடியாகவே விநியோகம் இடம்பெறுகின்றன.

இந்தியாவின் தமிழ்நாடு முதலமைச்சரால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பொருள்கள் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட ரயில் மூலம் இன்று அதிகாலை  யாழ்ப்பாணத்தை வந்தடைந்தன.

யாழ்ப்பாணத்திற்கு அனுமதிக்கப்பட்ட பொருட்களில் 40 வீதமானவற்றை இந்த ரயிலில் ஏற்றக்கூடிய வசதிகள் காணப்பட்டமையினால் யாழிற்கு அனுமதிக்கப்பட்ட 20 ஆயிரம் அரிசி மூடைகளில் 8 ஆயிரத்து 755 மூடைகளும்,  500 பைக்கற் பால் மாவும் மட்டுமே தற்போது எடுத்து வரப்பட்டன.

இவ்வாறு  எடுத்து வரப்பட்ட  பொருள்களில் மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்குரியவை பளை ரயில் நிலையத்திலும், சாவகச்சேரி, பருத்தித்துறை, கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவுகளுக்குரியவை சாவகச்சேரி ரயில் நிலையத்திலும் இறக்கப்பட்டது.

அதேநேரம் எஞ்சியவை யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் வைத்து யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர்  ராகேஷ்  நட்ராஜினால்  மாவட்டச் செயலாளரிடம் கையளிக்க மாவட்டச் செயலாளர் பிரதேச செயலாளர்களிடம்  கையளித்தார்.

இந்தப் பொருட்களில் வேலணை பிரதேச செயலகப் பிரிவில் 3,000 குடும்பங்களுக்கும், ஊர்காவற்றுறை பிரதேச செயலகப் பிரிவில் 2,750 குடும்பங்களுக்கும், காரைநகர் பிரதேச செயலகப் பிரிவில் 2,500 குடும்பங்களுக்கும் நெடுந்தீவுப் பிரதேச செயலகப் பிரிவில் 1,200 குடும்பங்களுக்கும், மருதங்கேணி செயலகப் பிரிவில் 3,750 குடும்பங்களுக்கும் அனுமதிக்கப்பட்ட அளவு முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.

கொண்டு வரப்பட்ட பொருட்கள் புகையிரத நிலையத்தில் வைத்து உடனடியாக பயணாளிகளிற்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

படங்கள் – ஐ.சிவசாந்தன்  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-04-24 11:58:49
news-image

பாடசாலையில் விளையாட்டு பயிற்சியில் பங்கு பற்றாத...

2025-04-24 11:50:43
news-image

‘ஸ்ரீ தலதா வழிபாடு’: கண்டிக்கு வருகை...

2025-04-24 12:00:22
news-image

மன்னாரில் இந்திய அரசின் அபிவிருத்தித் திட்டங்கள்...

2025-04-24 12:01:52
news-image

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின்...

2025-04-24 11:33:03
news-image

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு மீதான...

2025-04-24 11:29:31
news-image

பூஸா சிறைச்சாலையில் விசேட சோதனை ;...

2025-04-24 10:53:50
news-image

மினுவங்கொடை துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு...

2025-04-24 11:44:09
news-image

இலங்கையர்களுக்கு இந்திய அரசின் ஆயுஷ் புலமைப்பரிசில்

2025-04-24 11:25:58
news-image

உலக வங்கி பிரதிநிதிகளை சந்தித்தார் மேல்...

2025-04-24 11:48:48
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- ஜஹ்ரான் ஹாசிமே...

2025-04-24 11:01:46
news-image

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன்...

2025-04-24 10:35:54