ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18 ஆவது நினைவேந்தலும் 'ஊடகர் ஜீ.நடேசன் நினைவலைகள்' கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீடும்

By Digital Desk 5

30 May, 2022 | 01:20 PM
image

மட்டக்களப்பில் கடந்த 2004 ஆண்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை  நடேசனின் 18 ஆவது ஞாபகார்த்த தினம் எதிர்வரும் 31.05.2022 திகதி நினைவு கூரப்படவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18 ஆவது  நினைவேந்தலும் 'ஊடகர் ஜீ.நடேசன் நினைவலைகள்' கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீடும் ஞாயிற்றுக்கிழமை (29) மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் இ.தேவஅதிரன் தலைமையில் மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் 29 ஆம் திகதி  காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஆலோசகரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான ஏ.எல்.எம்.சலீம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்ககங்களின் முன்னாள் தலைவரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான இரா.துரைரெத்தினம், முன்னால் இன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரன், பா.அரியநேந்திரன், ஞா.சிறிநேசன், முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இந்திரகுமார் பிரசன்னா, நடராசா, இரா.துரைரெட்ணம், கட்சிகள் சார்ந்த பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், சமூக நலன் விரும்பிகள், மதகுருமார், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் திருவுருவப் படத்திற்குமலர் மாலை அணிவித்து, நினைவுச் சுடரேற்றப்பட்டதனைத் தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டு, மௌன அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்த கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியமும், சிவராம் ஞாபகார்த்த மன்றமும் (சுவிஸ்) இணைந்து வெளியிட்ட 'ஊடகர் ஜீ.நடேசன் நினைவலைகள்' கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீடும் இடம்பெற்றது.

இதன் வரவேற்புரையை  கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றிய உபதலைவர் க.ஜெகதீஸ்வரனும், தலைமையுரையினை கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஆலோசகரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான, இ.பாக்கியராஜா நிகழ்த்தியதுடன், நூல் வெளியீட்டுரையினை கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றிய தலைவர் இ.தேவஅதிரன் நிகழ்த்தினார்.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஆலோசகரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான ஏ.எல்.எம்.சலீம் குறித்த நூல் வெளியிட்டு வைத்தார்.

இதனை தொடர்ந்து  இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கங்களின்  முன்னாள் தலைவரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான இரா.துரைரெத்தினம் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகவியலாளருமான பா.அரியநேந்திரன் ஊடகர் ஜீ.நடேசன் தொடர்பான சிறப்பு நினைவுப்பகிர்வுகளும் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்கள்  சிறப்பு நூல் பிரதிகளையும் பெற்றுக்கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right