(இராஜதுரை ஹஷான்)
நாட்டின் பொருளாதார வளர்ச்சி பன்மடங்கு அமெரிக்க டொலர்களாக உயர்வடையும் வரை அரச சேவையில் எத்தரப்பினருக்கும் ஓய்வூதிய கொடுப்பனவினை வழங்குவது பொருத்தமற்றதாகும்.நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் அரச சேவையாளர்கள் குறைந்தது 10 வருட காலத்திற்கு தங்களின் வரபிரசாதங்களை விட்டுக்கொடுக்க வேண்டும் என அரச சேவை,மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சின் செயலாளர் பியந்த மாயாதுன்ன தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுக்கான கொள்கை திட்டத்தை ஆரம்பிக்கும் நிகழ்வு தபால் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரச சேவையில் உயர் அதிகாரியில் இருந்து சிற்றூழியர்கள் வரை தற்போது சேவை வருவதும் பிரதான செலவாக உள்ளது.கடந்த ஜனவரி மாதம் 10 ஆயிரமாக காணப்பட்ட அரச நிறுவனத்தின் போக்குவரத்து சேவை தற்போது 25ஆயிரமாக உயர்வடைந்துள்ளது.குறைந்த வருமானம் பெறும் ஒரு அரச சேவையாளர் வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் அரச சேவையாளர்களின் சம்பள அதிகரிப்பு சாத்தியமற்றது.ஒருவேளை அதிகரிக்கப்பட்டால் சம்பளம் பெறாத தரப்பினரின் தாக்குதலை எதிர்க்கொள்ள நேரிடும் அந்தளவிற்கு சமூக கட்டமைப்பில் பிரச்சினை தீவிரமடைந்துள்ளன.
பெரும் போக விவசாயம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சிறுபோக விவசாயத்தின் விளைச்சல் 50 சதவீதத்தினால் குறைவடையும் என்பதே உண்மை,அதனை ஏற்றுக்கொள்ளவே வேண்டும். எதிர்வரும் காலங்களில் பாரிய உணவு தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும்.
அரச காரியாலயங்களை சுற்றியுள்ள இடங்களில் மேலதிக பயிர்ச்செய்கையில் ஈடுப்படுங்கள்.எதிர்வரும் காலங்களில் மூன்று வேளை உணவிற்கு பதிலாக இரு வேளை உணவை பெற்றுக்கொள்வதற்கு மேலதிக பயிர்ச்செய்கைகளில் ஈடுப்பட வேண்டும்.
நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பன்மடங்கு அமெரிக்க டொலர்களாக உயர்வடையும் வரை அரச சேவையில் எத்தரப்பினருக்கும் ஓய்வூதிய கொடுப்பனவினை வழங்குவது பொருத்தமற்றதாகும்.நாட்டை முன்னேற்ற வேண்டுமாயி;ன் அரச சேவையாளர்கள் குறைந்தது பத்து வருடகாலத்திற்காவது தங்களின் வரபிரசாதங்களை விட்டுக்கொடுக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM