தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக ஸ்திரமின்மைக்கு தீர்வு காணுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ பீட மாணவர்கள் மீது பொலிஸாரால் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விஹார மகாதேவி பூங்காவிற்கு அருகாமையில் இருந்து மருத்துவ பீட மாணவர்களின் போராட்டம் ஆரம்பமானது.
மருத்துவ பீட மாணவர்கள் நாட்டின் பல பல்கலைக்கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தியவாறு மருதானை டெக்னிக்கல் சந்தி வழியாக புறக்கோட்டையை நோக்கி பேரணியாகச் சென்றனர்.
இதையடுத்து குறித்த மாணவர்கள் அங்கிருந்து ஜனாதிபதி மாளிகையை நோக்கிச் சென்ற நிலையில் கொழும்பு உலக வர்த்தக மையப்பகுதியை அண்மித்த பகுதியில் பொலிஸார் வீதித்தடைகளை போட்டு ஆர்ப்பாட்டப் பேரணிக்கு தடையேற்படுத்தினர் இதனால் அங்கு குழப்ப நிலை உருவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு குறித்த ஆர்ப்பாட்டம் கலைக்கப்பட்டது.
இதனால் அப்பகுதியில் பதற்ற நிலைமை நீடித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM