மட்டக்குளி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்களை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் 18 வயதான மட்டக்குளி பகுதியைச் சேர்ந்தவர்கள் என குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் சந்தேக நபர்களை இன்று பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 இதேவேளை சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரான “குடு ரொஷான்” உட்பட 11 பேரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளதுடன், அவர்களை எதிர்வரும் 31 ஆம் திகதிவரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) மட்டக்குளி சமித்புர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் நால்வர் உயிரிழந்ததுடன், மூவர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.