குருநாகல் - கஹட்டகஹா மைன் பைட் சுரங்கத்தில்,  ஆயிரத்து 132 அடி ஆழகத்தில் சுரங்க பணியாளர்கள் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சுரங்கத்தை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 25 ஆம் திகதி முதல் கஹட்டகஹா மைன் பைட் சுரங்க தொழிலாளர்கள்   உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.

இந்த போராட்டத்தில் 3 பணியாளர்கள் திடீரென்று நோய்வாய்ப்பட்டதையடுத்து போராட்டம் வலுப்பபெற்றது.

இதனையடுத்து கைத்தொழில் மற்றும் வர்த்தக இராஜங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாஸ ஆர்ப்பாட்டம் செய்யும் இடத்துக்கு விரைந்து சுரங்க பணியாளர்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையினை தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.