நேபாளத்தில் சிறிய ரக தனியார் பயணிகள் விமானம் 22 பயணிகளுடன் மாயம்

By T Yuwaraj

29 May, 2022 | 02:08 PM
image

நேபாளத்தில் ஒரு தனியார் விமான நிறுவனத்தால் இயக்கப்படும் சிறிய ரக பயணிகள் விமானம் வெளிநாட்டினர் உட்பட 22 பேருடன் இன்று ஞாயிற்றுக்கிழமை காணாமல் போயுள்ளதாக விமான அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து வடமேற்கே 200 கிமீ தொலைவில் உள்ள சுற்றுலா நகரமான பொக்காராவிலிருந்து வடமேற்கில் 80 கிமீ தொலைவில் உள்ள ஜோம்சோம் நகருக்கு தாரா ஏர் 9 NAET என்ற இரட்டை இயந்திர விமானம் பறந்து கொண்டிருந்த விமானம், உள்ளூர் நேரப்படி காலை 9:55 மணிக்கு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொடர்பை இழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் 4 இந்தியர்கள் மற்றும் 3 ஜப்பானியர்கள் இருந்தனர். மீதமுள்ளவர்கள் நேபாள நாட்டு குடிமக்கள் மற்றும் விமானத்தில் பணியாளர்கள் உட்பட 22 பயணிகள் இருந்ததாக தெரியவத்துள்ளது.

இந்நிலையில், அதிகாரிகளின் கூற்றுப்படி, இமயமலை பகுதியின்  ஐந்தாவது பெரிய மாவட்டமான முக்திநாத் கோவிலின் யாத்திரை மலைப்பகுதியான முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள லெட்டின் "திட்டி" பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதாக சந்தேகிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right