திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் இனந்தெரியாதோரால் தீக்கிரையான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் சனிக்கிழமை இரவு (28) இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குடும்பஸ்தரான (ஏ.சி.பரீட் வயது(38) ஒருவருக்கு சொந்தமான பல்சர் ரக மோட்டார் சைக்கிளை வீட்டு முற்றத்தில் வழமை போன்று நிறுத்தி விட்டு இரவில் தூங்கிய போது தீ பற்றி எரியும் வாசனை ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து இரவு 12.30 மணியளவில் வெளியில் வந்து பார்த்தவுடன் மோட்டார் சைக்கிள் எரிந்துள்ளது.
மோட்டார் சைக்கிளுடன் துணி உலரவைக்கும் இயந்திரம், சிறிய ரக துவிச்சக்கர வண்டியுடனான உடுப்பும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த மோட்டார் சைக்கிள் லீசிங்கில் இருப்பதாகவும் வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு பொலிசார் விரைந்து விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM