சாணக்கியத்தின் சாட்சி அமரர் ஆறுமுகன்

Published By: Vishnu

29 May, 2022 | 03:35 PM
image

இங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானைப் பற்றி கூறுவதானால் அவர் வரலாறு போற்றும் மாமனிதராவார். 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அவரது 58ஆவது ஜனன தினமாகும்.

தொடர்பாடல் உத்தியோகத்தர் தெரிவில், மலையக சமூகத்துக்கு தீங்கு வரும் என்றறிந்தால் பதவி பவிசுகளை தூக்கியெறிய தயங்காத மாமனிதர், நாடற்றவர் என்ற நாமத்தை மாற்றியவர், ராஜதந்திர அணுகுமுறையில் 3 இலட்சம் மலையக சொந்தங்களுக்கு முகவரி தந்தவர் என்ற வரலாறுகளுக்கும் சொந்தமானவர்.

30 ஆண்டுகால அரசியல் பயணத்தில் ஆற்றல்மிகு சாதனையாளர். பெரும்பான்மை தலைமைகள் பெரிதும் எதிர்பார்த்திருக்கும் அரசியல் அங்கீகாரத்தை ஆக்கித் தந்ததில் பாரிய பங்களிப்பு இவர்வசமே.

பேராண்மைக்குரிய பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் கட்டியெழுப்பிய காத்திரமான இலங்கை தொழிலாளர் காங்கிரசை அவரது மறைவின் பின்னரும் கெட்டியாக அணைத்துக்காத்து வந்தவர்.

திரை மறைவு சதிகளையெல்லாம் திசை தெரியாது ஆக்கியவர். அவதூறு வந்தபோதும் அசையா நெஞ்சுடன் ஆலமரமாக நிற்பது அவரது சாணக்கியத்துக்கு ஒரு சாட்சி.

1990 களின் பின்னரான அவரது அரசியல் பயணக்காலத்தில்  93இல் காங்கிரஸின் உத்தியோகபூர்வ நிதிச் செயலாளராக பொறுப்பேற்று 1994 இல் பொதுச் செயலாளராக உயர்ந்து, அதே ஆண்டில் 74 ஆயிரம் வாக்குகளை பெற்று பாராளுமன்ற உறுப்பினரானது வரலாற்றுப் பதவாகிறது.

அமைச்சராக அவர் ஆற்றிய சேவைகள் பல, 1994இல் கால்நடை அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர், 2001இல் பெருந்தோட்ட வீடமைப்பு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர், 2004 இல் இளைஞர் வலுவூட்டல் அமைச்சர் என தொடர்ந்து வந்த பதவிகள் இவை. அவரது ஆளுமையின் அடையாளங்கள்.

மலையக சமூகத்துக்கு தீங்கு வரும் என்று தெரிந்தால்  அஞ்சா நெஞ்சனாக அவரைப்பார்க்க முடியும். பதவி பவிசுகளை துச்சமென தூக்கியெறிய தயாங்காதவர். எத்தனை எதிர்ப்புகள் எதிரே நின்றாலும் அதனை தவிடுபொடியாக்கும் வல்லமை கொண்டவராக திகழ்ந்தவர்.

நாடற்றவர் என்ற நாமத்தை மாற்றிவர். ராஜதந்திர அணுகுமுறையில் 3இலட்சம் மலையக சொந்தங்களுக்கு முகவரி தந்தவர்.

தொலைநோக்கு கொண்ட தனித்துவத் தலைவர். பணி என்று வந்தால் பகல் இரவு பாராதவர். விட்டுக் கொடுக்கும் பரந்த மனம் கொண்ட அவர் இ.தொ.கா.வின் கட்டுக்கோப்பிலே சாசகம் புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு வாழ நாளும் பாடுபடும் நம் சமூகத்துக்கு கேடு ஏதும் சூழாமல் பார்ப்பதில் அவருக்கு ஈடு யாருமில்லை. சொந்தக்காணி வேண்டும், சோகம் மறைந்தோட வருமானத்தில் உயர்வு வேண்டும், கல்வியில் உயர்ச்சி வேண்டும் எனும் மாற்றத்துக்காய் உழைத்த சரித்திரத் தலைவருக்காக இன்றைய அவரது 58ஆவது ஜனன தினத்தில் பிரார்த்திப்போம். அஞ்சலிகளை செலுத்துவோம்.

தேவதாஸ் சவரிமுத்து

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08