பண்டாரகம - அட்டுலுகம பகுதியில் வைத்துக் காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த சிறுமியை வேறு இடத்தில் வைத்து கொலை செய்து, அவரது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றில் வீசியிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அட்டலுகம - எபிட்டமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 9 வயதுடைய குறித்த சிறுமி அவரது வீட்டிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிலுள்ள கடையொன்றுக்கு உணவு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நேற்று சென்றுள்ளார். எனினும் கடைக்குச் சென்று ஒரு மணித்தியாலத்தின் பின்னரும் அவர் வீடு திரும்பாததையடுத்து வீட்டார் அவரை தேடியுள்ளனர்.
சிறுமியின் உறவினர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து நீண்ட நேரம் அவரை தேடியும் கிடைக்காததையடுத்து பொலிஸில் முறைப்பாடளித்துள்ளனர்.
இந்நிலையில், பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளையடுத்தே குறித்த சிறுமி வீட்டிற்கு அருகிலுள்ள அட்டலுகம - பெரியபள்ளி என்ற இடத்திற்கு அருகிலுள்ள சதுப்பு நிலப்பகுதியொன்றிலிருந்து இன்று சனிக்கிழமை மாலை சடலமா மீட்க்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, அட்டாலுகம பிரதேசத்தை சேர்ந்த அப்பாவி சிறுமியை கொலை செய்த சந்தேக நபர்களை கைது செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
“ ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவிக்கின்றேன்.இந்த கொடூர குற்றத்திற்கு அவரது குடும்பத்தினருக்கு விரைவில் நீதி கிடைக்க நான் உறுதியளிக்கிறேன்.சிறுமி ஆயிஷா சுவர்க்கம் செல்ல எனது பிரார்த்தனைகள்.” என குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM