அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்குள் இருவேறுப்பட்ட நிலைப்பாடு

By Digital Desk 5

28 May, 2022 | 10:43 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்குள் இருவேறுப்பட்ட நிலைப்பாடு காணப்படுகிறது.

இரட்டை குடியுரிமையுடையவரின் அரசியல் பிரவேசத்திற்கு தடை விதித்தல்,நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தல் உள்ளிட்ட திருத்த யோசனைகளுக்கு பொதுஜன பெரமுனவின் ஒரு தரப்பினர் ஆதரவு வழங்க இணக்கம் தெரிவித்துள்ள வேளை ,பிறிதொரு தரப்பினர் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தசசட்டமூல வரைபு தொடர்பில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவிற்கும்,ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு நாளை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளதாக அறிய முடிகிறது.

நீதி மற்றும் அரசியலமைப்பு திருத்தம் மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்ட மூலவரைபில் உள்ளடக்கப்பட்டுள்ள திருத்த யோசனைகள் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

21ஆவது திருத்தத்தின் ஊடாக இரட்டை குடியுரிமை கொண்ட நபர் அரசியல் செல்வாக்கு செலுத்துவதற்கு முழுமையாக தடை விதித்தல்,நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியின் அதிகாரத்தை பிரதமருக்கு வழங்கல் உள்ளிட்ட யோசனைகளுக்கு பொதுஜன பெரமுனவின் ஒரு தரப்பினர் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள நிலையில்,பிறிதொரு தரப்பினர் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவிற்கும்,ஆளும் தரப்பு உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு  ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளதாக அறிய முடிகிறது.

இரட்டை குடியுரிமையுடையவர் இலங்கை பாராளுமன்றில் உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூல வரைபின் 91 (1)(xiii) உப பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள  திருத்த யோசனையை நீக்கிக்கொள்ளுமாறு பொதுஜன பெரமுனவின் பஷில் ஆதரவாளர்கள் அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்பினரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right