19 ஆவது திருத்தத்தை 21 ஆவது திருத்தமாக கொண்டுவர கட்சித் தலைவர்களிடையே இணக்கம்

Published By: Digital Desk 3

28 May, 2022 | 04:36 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சினை வகிக்க முடியுமா, முடியாதா என்பது குறித்து அரசியல் கட்சிகள் மாற்று கருத்துக்களை முன்வைத்துள்ளன. 

அரசியலமைப்பு திருத்த விவகாரத்தில் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை 21 ஆவது திருத்தமாக நடைமுறைப்படுத்துவதை முதற்கட்ட தீர்மானமாகவும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதை இரண்டாம் கட்ட தீர்மானமாகவும் செயற்படுத்த கட்சி தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டமூல வரைபு தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி,தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகளின் யோசனைகளை பெற்று எதிர்வரும் வாரத்திற்குள் அரசியமைப்பு வரைபினை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் அரசியல் கட்சிகளின் யோசனைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் விசேட சந்திப்பு இடம்பெற்றது.

நாட்டில் தீவிரமடைந்துள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

அரசியலமைப்பு திருத்தம் அரசியல் ஸ்தீரத்தன்மையை உறுதிப்படுத்தும் என்பதை கருத்திற்கொண்டு அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் குறித்து அதிக  அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நீதியமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 21ஆவது திருச்சட்ட மூல வரைபு குறித்து முன்வைக்கப்படும் திருத்த யோசனைகள் முழுமையாக பரிசீலனை செய்யப்பட்டு பொது கொள்கைக்கமைய அடுத்தக்கட்ட நடவடிக்கைக துரிதமாக முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட்டத்தின் ஆரம்ப உரையின் போது குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என நாட்டு மக்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள்.

உத்தேச 21ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்திற்கு அப்பாற்பட்ட விடயங்கள் உள்ளடக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் தற்போது 19ஆவது திருத்தத்தின் முக்கிய விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூல வரைபில் உள்வாங்கப்படவில்லை.

காணப்படும் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்துக்கொண்டு விரைவாக 21ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.

நாட்டுக்கும்,நாட்டு மக்களுக்கும் பயன்பெறும் வகையிலான தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

உத்தேச அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருசில விடயங்களை செயற்படுத்த வேண்டுமாயின் பொதுசன அபிப்ராயம் கோரப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

தற்போதைய நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு என்பது சாத்தியமற்றது.சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்லாத விடயங்களை மாத்திரம் செயற்படுத்தி 21 ஆவது திருத்தச்சட்டத்தை விரைவாக நிறைவேற்றுமாறு பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினர்கள் எடுத்துரைத்தனர்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை 21ஆவது திருத்தமாக நடைமுறைப்படுத்துவதை முதற் கட்டமாகவும்,நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதை இரண்டாம் கட்டமாகவும் செயற்படுத்த இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

21ஆவது திருத்த வரைபிற்கமைய ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சினை வகிக்க முடியுமா என்பது தொடர்பில் அரசியல் கட்சிகள் மாற்று யோசனைகளை முன்வைத்துள்ளன.

மக்கள் விடுதலை முன்னணி,தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய தரப்பினரது யோசகைளை பெற்று அவற்றையும் பரிசீலனை செய்து எதிர்வரும் வாரத்திற்குள் 21 ஆவது திருத்த சட்டமூல வரைபினை பூரணப்படுத்தி எதிர்வரும் 6ஆம் திகதி முழுமையான வரைபியை அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19