பெரும்போக விவசாயத்திற்கு தேவையான உரம் வழங்கப்படும் - விவசாயத்துறை அமைச்சர்

Published By: Digital Desk 5

28 May, 2022 | 04:09 PM
image

(இராஜதுரை ஹஷான்)

காசு கொடுத்தும் உரத்தை கொள்வனவு செய்ய முடியாத நிலைமை காணப்படுகிறது. சிறுபோக விவசாயத்திற்கு உரம் வழங்குவதற்கான பொறுப்பை ஏற்க முடியாது. 

பெரும்போக விவசாயத்திற்கு தேவையான உரத்தை வழங்குவதற்கான பொறுப்பினை ஏற்க முடியும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

21ஆவது திருத்தம் முறையாக நிறைவேற்றப்படாவிடின் அரசாங்கத்தில் இருந்து  விலகுவோம் – மஹிந்த அமரவீர – Athavan Newsவிவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

புதிய அரசாங்கத்தில் விவசாயத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள காரணத்தினால் விரைவாக உரத்தை விநியோகிக்க முடியாது.

காசு கொடுத்து கூட உரத்தை பெற்றுக்கொள்ள முடியாத நெருக்கடி நிலைமை காணப்படுகிறது.உர இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளமை அதற்கு பிரதான காரணியாக உள்ளன.

இரசாயன உர நிறுவனத்திற்கு 23 மில்லியனும்,சேதன பசளை உற்பத்தி நிறுவனத்திற்கு 5000மில்லியனும் செலுத்தப்படவுள்ளதால் உரத்தை கொள்வனவு செய்வது சிக்கல் தன்மையில் உள்ளது.ஆகவே ஒரே நாளில் உரத்தை இறக்குமதி செய்ய முடியாது.

சிறுபோக விவசாய நடவடிக்கைக்கு உரம் விநியோகிப்பதற்கான பொறுப்பை ஏற்க முடியாது. பெரும்போக விவசாயத்திற்கான உர விநியோகத்திற்கான பொறுப்பினை ஏற்க முடியும்.விவசாயிகளுக்கு பொய்யான வாக்குறுதியை வழங்க விரும்பவில்லை என்றார்.

எரிபொருள் தட்டுப்பாடு,உரம் பற்றாக்குறை ஆகிய காரணிகளினால் சிறுபோக பயிர்ச்செய்கை 50 சதவீதத்தினால் குறைவடைவதால் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு பிறகு அரிசி உற்பத்தி பாரிய விளைவுகளை எதிர்க்கொள்ள நேரிடும் என போராதனை பல்கலைக்கழகத்தில் விவசாய பீட சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01