(எம்.மனோசித்ரா)

பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை அவர்கள் சட்ட ரீதியாக நிறைவேற்ற வேண்டும் என்பதோடு , அவ்வாறு செயற்படும் அனைவரது பாதுகாப்பையும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் உறுதிப்படுத்துவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை - சுஹூருபாயவில் அமைந்துள்ள பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Tiran Alles FR re-fixed for argument | Daily News 
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் 

பொலிஸ்மா அதிபர் சி.டீ.விக்கிரமரத்ன உள்ளிட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடும் போது எதிர்கொள்ளும் நடைமுறை சட்ட சிக்கல்கள் தொடர்பில் உரிய நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

பொலிஸாரினால் கட்டுப்படுத்த முடியாத பாரிய நெருக்கடிகள் ஏற்படும் போது, முப்படையினரின் உதவியைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் இதன் போது ஆலோசனை வழங்கினார்.