(எம்.எம்.சில்வெஸ்டர்)

அளுத்கம கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தின் எரிபொருள் நிரப்பும் ஊழியராக கடமையாற்றும் ஒருவரின் மனைவி ஒரு போத்தல் பெற்றோலை 800 ரூபாவுக்கு  விற்பனை செய்த போது கையிருப்பிலிருந்த பெற்றோல் போத்தல்களுடன் பேருவளை பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், தனது கணவர் கொண்டு வரும் பெற்றோலையை தான் விற்பனை செய்வதாக கூறியுள்ளார்.

பொலிஸ் அதிகாரியொருவர் ஒற்றன் போல் அப்பெண்ணிடம்  800 ரூபாவுக்கு பெற்றோல் கொள்வனவு செய்துள்ளார்.

இதனால், அப்பெண்ணின் கணவர் எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து கொண்டு வரும் பெற்‍றோலை 800 ரூபாவுக்கு விற்பனை செய்வது கண்டறிப்பட்டதாக பேருவளை பொலிஸ் நிலைய பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். 

இதையடுத்து அப்பெண் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.