நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக நிர்மாணத் துறையில் ஈடுபட்டுள்ள சுமார் 75 வீதமான தொழிலாளர்கள் தொழிலை இழக்கும் அபாயத்தில் உள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் எம்.டி.பால் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் சுமார் 300,000 கட்டுமானத் தொழிலாளர்கள் மறைமுகமாக பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள 1.2 மில்லியன் தொழிலாளர்கள் அடுத்த மாதத்திற்குள் தொழிலை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.
மேலும் நாட்டில் தற்போது 90 வீதமான கட்டுமானப் பணிகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. அதன்படி, 800,000 முதல் 900,000 வரையிலான தொழிலாளர்கள் கட்டுமானத் துறையின் மூலம் நாட்டிற்கு நேரடியாகப் பங்களிப்பு செய்கின்றனர்.
பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பல கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் வேலை இழந்துள்ளதாக தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் மேலும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM