எரிவாயு விநியோகம் நாளை தினம் ஞாயிற்றுக்கிழமை (29) இடபெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

வியாழக்கிழமை (26) இலங்கையை வந்தடைய இருந்த 3,500 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் வருவதற்கு மேலும் தாமதமாகுமென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக , குறித்த எரிவாயு கப்பல் நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடைவதுடன் திங்கட்கிழமை முதல் எரிவாயு விநியோகிக்கபடுமென லிட்ரோ நிறுவத்தின் தலைவர் விஜித ஹோத் தெரிவித்தார்.

இதனால் , எரிவாயு விநியோகத்தை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முன்னெடுக்ககூடியதாக இருக்கும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆகவே , எரிவாயு விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.