வீட்டுக்கு அருகிலுள்ள கடைக்குச் சென்ற சிறுமியொருவர் காணாமல்போயுள்ளதாக பண்டாரகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பண்டாரகம – அட்டுலுகம பகுதியிலேயே கடைக்குச் சென்ற 9 வயது சிறுமியொருவர் நேற்று முதல் காணாமல் போயுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (27) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் குறித்த சிறுமி காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தமது முறைப்பாட்டில் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
காணாமல்போன சிறுமி தனது வீட்டுக்கு அருகிலுள்ள கடையொன்றுக்கு சென்றுள்ளதுடன், அதன் பின்னர் வீடு திரும்பவில்லையென குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், சி.சி.ரி.வி. காட்சிகளின் மூலம் சிறுமி கடையிலிருந்து வெளியே வந்தமை அவதானிக்கப்பட்ட போதிலும், வீடு திரும்பவில்லையென பெற்றோர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பொலிஸார் குறித்த சிறுமியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM