(எம்.மனோசித்ரா)

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் அஜித் ரோஹண உள்ளிட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் இருவருக்கும் , பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவருக்கும் பொலிஸ்மா அதிபரினால் திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சிரேஷ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் கே.அஜித் ரோஹண குற்றங்கள் மற்றும் போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தென் மாகாணத்திற்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய எம்.டீ.ஆர்.எஸ்.தமிந்த , கிழக்கு மாகாணத்திற்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எல்.கே.டபிள்யு.கே.சில்வா கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து குற்றங்கள் மற்றும் போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.