இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 பேருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளது என்று உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
இந்த குரங்கு காய்ச்சலால் ஓரினச்சேர்க்கையாளர்கள், இரு பாலின சேர்க்கையாளர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் என இங்கிலாந்து, ஸ்பெயின், போர்த்துக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின், 'உலக தொற்று அபாய தயார்நிலை' குழுவின் இயக்குனர் சில்வி பிரையன்ட் நேற்று தெரிவித்ததாவது,
''மக்கள் கவலைப்படும் அளவுக்கு குரங்கம்மை வேகமாக பரவும் நோயல்ல. ஆனால், மெதுவாக இது சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம் உள்ளது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு விரைவான நடவடிக்கை தேவை. தடுப்பூசியும், முறையான சிகிச்சையும் இதற்கு ஒரே தீர்வு. பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து, தனிமைப்படுத்துவதே, இதன் பரவலை தடுப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கையாகும். எதிர்காலத்தில் இந்த குரங்கு காய்ச்சல் இன்னும் அதிக எண்ணிக்கையிலானவர்களை பாதிக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM