யாழில் டெங்கு காய்ச்சலால் 5 வயது சிறுமி உயிரிழப்பு

Published By: Digital Desk 5

28 May, 2022 | 10:22 AM
image

யாழில் டெங்குக் காய்ச்சாலால் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் யாழில் ஒருவாரத்தில் டெங்கு காய்ச்சலால் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் உடுவிலைச் சேர்ந்த பரசுதன் யோயிதா (வயது-5) என்ற சிறுமியே இவ்வாறு டெங்கு காய்ச்சல் காரணமாக  உயிரிழந்தார்.

சிறுமிக்கு கடந்த 23 ஆம் திகதி மாலை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பனடோல் மாத்திரை வழங்கப்பட்டதனால் ஒரளவு குணமடைந்துள்ளார்.

கடுமையான காய்ச்சல் காரணமாக இணுவிலில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சிறுமி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 

அங்கு அவருக்கு மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரைகள் வழங்கப்பட்டு வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும்  சிறுமிக்கு காய்ச்சலும் வாந்தியும் அதிகரித்ததால் மீண்டும் தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

அவரது உடல்நிலையைக் கருத்திற்கோண்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சிறுமி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். 

டெங்கு காய்ச்சல் காரணமாக சிறுமி உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது சிறுவர் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார்.

கொழும்புத்துறை பாண்டியன்தாழ்வைச் சேர்ந்த 11 வயதுச் சிறுவன் டெங்கு காய்ச்சலினால் கடந்த சனிக்கிழமை (21)  உயிரிழந்தார்.

காய்ச்சல் ஏற்பட்டால் நேரடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலையில் மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாரத் துறை வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50