(எம்.மனோசித்ரா)
எரிபொருட்களை கொள்வனவு செய்து அவற்றை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக FuelIMC என்ற செயலியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
குறித்த செயலி பொலிஸ் பிரிவுகளுக்கான பொறுப்பதிகாரிகள் , பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவற்றை எரிபொருள் நிரப்பும் நிலைய உரிமையாளர்களுக்கு வழங்கி , அவர்கள் ஊடாக அங்கு வருகை தரும் வாகனங்களின் இலக்கம் குறித்த செயலியில் பதிவு செய்யப்படும்.
அதற்கமைய ஒரே வாகனம் பல இடங்களில் எரிபொருளை நிரப்புவதற்கு முயற்சித்தால் அது கண்டு பிடிக்கப்படும்.
இதன் ஊடாக எரிபொருளை பதுக்குபவர்கள் தொடர்பில் இலகுவாக இனங்கண்டு உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.
தேவையானளவு எரிபொருளைப் பெறுபவர்களுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து குறித்த செயலியை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM