(எம்.எப்.எம்.பஸீர்)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக அமைதிப்போராட்டத்தில் ஈடுபடும் கோட்டா கோ கமவுக்கு இன்றுடன் 50 நாட்கள் நிறைவடைகின்றன.
இந்நிலையில் இன்று (28) கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டங்கள் தொடர்பில், கோட்டை பொலிஸார், கோட்டை நீதிவான் திலிண கமகே முன்னிலையில் விடயங்களை சமர்ப்பித்து தடை உத்தரவு பெற்றுக்கொண்டுள்ளனர்.
இந்த போரட்டங்களை ஏற்பாடு செய்துள்ளவர்கள் என பொலிஸார் சந்தேகிக்கும் அருட் தந்தை ஜீவந்த பீரிஸ், ரங்க லக்மால், எரங்க குணசேகர, வசந்த முதலிகே, லஹிரு வீரசேகர , ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களும் அவர்களால் வழி நடாத்தப்படுபவர்களும் கொள்ளுபிட்டி சந்தி முதல் கோட்டை நீதிவான் நீதிமன்ற அதிகார எல்லைக்கு உட்பட்ட எந்த அரச நிறுவனங்கள், சொத்துக்களுக்கும் உள் நுழைதல், சேதம் விளைவித்தல், கடமையில் உள்ள அரச அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தல், வன்முறைகளில் ஈடுபடல் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடக் கூடாது என கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனைவிட கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, என்.எஸ்.ஏ. சுற்று வட்டம் முதல் சைத்திய வீதி வரையிலும், என்.எஸ்.ஏ. சுற்றுவட்டம் முதல் ஜனாதிபதி மாவத்தை வரை, செரமிக் சந்தி முதல் யோர்க் வீதி, பெஸ்டியன் மாவத்தை வரையிலான முதலிகே மாவத்தை, வைத்தியசாலை வீதி, வங்கி வீதி, பாரான் ஜயதிலக மாவத்தை, செத்தம் வீதி, கெனல் வீதி ஆகியவற்றில் இன்று 28 ஆம் திகதி பயணிக்கவோ அதற்குள் உள் நுழையவோ கூடாது என நீதிமன்றம் போராட்டக் காரர்களுக்கு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM