பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கைக்கு இந்தியா, ஜப்பான் இணைந்து உதவத் தீர்மானம்

By Digital Desk 5

27 May, 2022 | 07:47 PM
image

(நா.தனுஜா)

பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு இந்தியாவுடன் ஒன்றிணைந்து உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக ஜப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளது.

டோக்கியோவில் கடந்த செவ்வாய்கிழமை குவாட் உச்சிமாநாட்டைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர் ஃபியுமியோ கிஷிடா மற்றும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இலங்கைக்கான உதவிகளை வழங்குவது குறித்து மேற்படி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. 

இச்சந்திப்பின்போது திறந்த மற்றும் சுதந்திரமான இந்திய - பசுபிக் பிராந்தியத்தைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள், பாதுகாப்பு, தூய வலுசக்தி மற்றும் முதலீடு உள்ளடங்கலாகப் பல்வேறுபட்ட துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இலங்கையின் நிலைவரம் தொடர்பில் கலந்துரையாடுமாறும், இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் மிகமோசமடைந்துவரும் மக்களின் வாழ்க்கைநிலை ஆகியவற்றுக்கு மத்தியில் இவ்விடயத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றத் தயாராக இருப்பதை உறுதிப்படுத்துமாறும் ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் அரசதலைவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

சுமார் அரை நூற்றாண்டுகளுக்கும் அதிகமான காலமாக இலங்கைக்கான உதவி வழங்குனர்களிலும், அபிவிருத்திப் பங்காளிகளிலும் ஜப்பான் முதன்மை நாடாக விளங்கிவருகின்றது. இருப்பினும் சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஜப்பானின் உதவிகள் அதிக கவனம் பெறவில்லை.

அதன்படி பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு இந்தியாவுடன் ஒன்றிணைந்து உதவிகளை வழங்கத்தயாராக இருப்பதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

ஜப்பானின் அனுசரணையுடன் முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த இரண்டு முக்கிய அபிவிருத்தித்திட்டங்கள் இலங்கை அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்ட பின்னரும், ஜப்பான் இலங்கைக்கு உதவ முன்வந்திருக்கின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மஞ்சள் நிற சேலையுடன் சபைக்கு வந்த...

2022-12-01 19:35:47
news-image

2 ஆவது முறையாகவும் பணவீக்கம் வீழ்ச்சி...

2022-12-01 16:36:33
news-image

5 வயதுக்கு குறைவான சிறுவர்களில் 42.9...

2022-12-01 16:29:27
news-image

தள்ளி விடப்பட்டதால் காயமடைந்த களுத்துறை பிரதேச...

2022-12-01 18:37:10
news-image

மின்சாரக் கட்டண அதிகரிப்பை உடனடியாக நிறுத்தவும்...

2022-12-01 16:26:37
news-image

தொழிலதிபரின் ஒன்றரை கோடி ரூபா மோசடி...

2022-12-01 16:21:19
news-image

சீன தூதுவர் - வெளிநாட்டலுவல்கள் அமைச்சின்...

2022-12-01 19:33:57
news-image

சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்கிலம் கற்க அரசாங்கம்...

2022-12-01 16:14:47
news-image

மின் விநியோகத்தை தடைசெய்தால் 3 இலட்சத்துக்கு...

2022-12-01 15:40:17
news-image

எனது அரசியல் தொழில்துறை வாழ்க்கை இன்னமும்...

2022-12-01 15:30:01
news-image

56.8 சதவீதமான மக்கள் இலங்கையை விட்டு...

2022-12-01 15:33:08
news-image

ரயில்களின் தாமதத்தைத் தடுக்க நேரத்தை மாற்றுவதால்...

2022-12-01 14:52:32