ஜனநாயகத்தை பாதுகாப்பதன் அவசியத்தை சபாநாயகரிடம் வலியுறுத்தினார் அமெரிக்கத் தூதுவர்

Published By: Vishnu

27 May, 2022 | 07:49 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியல் ஸ்தீரத்தன்மையை உறுதிப்படுத்தி,தற்போதைய பொருளாதார நெருக்கடியை வெற்றிக்கொள்ள புதிய பிரதமர் உட்பட அரசாங்கத்தினால் முடியும் என தான் நம்புவதாக தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மக்கள் எதிர்பாக்கும் அரசியல் மறுசீரமைப்பினை மேற்கொண்டு ஜனநாயகத்தை பாதுகாப்பதன் அவசியத்தையும் சபாநாயகர் மஹிந்த யாப்பாஅபேவர்தனவிடம் வலியுறுத்தினார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பாவிற்கும் இடையிலான சந்திப்பு 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்ற கட்டடத்தில் இடம்பெற்றது.

இலங்கை ஐக்கிய அமெரிக்க பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் ஊடாக இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தூதுவர் இதன்போது தெரிவித்தார்.

அத்துடன் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் முன்னெடுக்கும் பணிகளை பாராட்டிய தூதுவர் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் அவசியம் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தினார்.

இலங்கையில் ஜனநாயகத்தை வலுப்படுத்த அமெரிக்க தொடர்ந்து வழங்கிவரும் ஒத்துழைப்பிற்கு சபாநாயகர் இதன்போது நன்றி தெரிவித்தார்.இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் சபாநாயகருடன் மேற்கொண்ட முதலாவது சந்திப்பு இதுவாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்