அளவுக்கு மிஞ்சி பதுக்காதீர்கள் ! உயிரிழப்புக்களுக்கு நீங்களும் பொறுப்பாளிகளே !

Published By: Priyatharshan

28 May, 2022 | 12:03 PM
image

பெரும் நெருக்கடி நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ள நிலையில் அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாது சாதாரண மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இலங்கையின் பொருளாதார நிலை அதலபாதாளத்திற்கு சென்றுள்ளதாக பலரும் கருத்துத் தெரிவிக்கின்ற நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கு மக்கள் முண்டியடித்து வரிசைகளில் நிற்கின்ற அவலநிலை தோற்றம் பெற்றுள்ளது.

பெற்றோல், மண்ணெண்ணய், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ள மக்கள் திண்டாடும் இச் சந்தர்ப்பத்தில் பலர் அளவுக்கு அதிகமாக பொருட்களை கொள்வனவு செய்து சேமிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

“ உணவு தட்டுப்பாடு தீவிரமடைந்தால் எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாத காலப்பகுதியில் மக்கள் உணவின்றி பட்டினியால் உயிரிழக்கும் அவல நிலை ஏற்படும். நடுத்தர மக்களால் கொள்வனவு செய்ய முடியாத அளவிற்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கின்றன. பொது மக்கள் இயலுமான அளவு வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையில் கட்டாயம் ஈடுப்பட வேண்டும்” என தேசிய விவசாய ஒருங்கிணைப்பின் தலைவர் அனுராத தென்னகோன் கூறிகிறார்.

இவ்வாறான நிலையில் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது தமது தேவைக்கு மேலதிகமாக பொருட்களை கொள்வனவு செய்வதை நிறுத்த வேண்டும். ஏனெனில் ஏனைய மக்களுக்கும் பொருட்கள் கிடைக்காது அவர்களிடம் பணம் இருந்தும் பொருட்களை வாங்க முடியாது பட்டினியால் வாடும் நிலைக்கு தள்ளப்படுவர்.

“ நாட்டில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படப்போகின்றது என்ற செய்திகள் வெளியாகியவுடன் வசதி படைத்தவர்கள் அளவுக்கு அதிகமாக பொருட்களை வாங்கி சேமித்து வைக்கின்றனர். இதனால் கடைகளிலும் இன்னும் 2 வாரங்களுக்கு தேவையான பொருட்களே சேமித்து வைக்கப்பட்டுள்ளன. பொருட்களை ஏற்றிய கப்பல் நாட்டுக்கு வருகை தந்தால் மாத்திரமே மக்களுக்குத் தேவையான பொருட்கள் எதிர்காலத்தில் கிடைக்கும்” என்கிறார் கொழும்பு புறக்கோட்டையில் மொத்த வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகரான கிருபா.

“ நாட்டின் கையிருப்பில் உள்ள, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தொகை குறித்து, கணக்கிடப்பட்டு வருவதாகவும் இந்தக் கணக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர், நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட வேண்டிய அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தொகை குறித்து தீர்மானிக்கப்படும்” என சந்தை, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு குறிப்பிடுகின்றது.

எந்தப்பொருளாக இருந்தாலும் குறிப்பாக எரிபொருளாக இருந்தாலும் உங்கள் வாகனங்களில் சேமிக்கக் கூடிய எரிபொருளை பெற்று உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளுங்கள். அவ்வாறு இல்லாது மேலதிகமாக எரிபொருளை பெற்று வேறு கேன்களில் சேமித்து நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தாதீர்கள். 

கடந்த சில தினங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 429 சுற்றிவளைப்புக்களில் 137 பேர் எரிபொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்ததன் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிடுகின்றார்.

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 27 ஆயிரம் லீற்றர் பெற்றோல் , 22 ஆயிரம் லீற்றர் டீசல், 10 ஆயிரம் லீற்றர் மண்ணெண்ணெய் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. எனவே ஒவ்வொருவரும் பொறுப்புணர்ந்து பதுக்கி வைத்து எரிபொருளை விற்பனை செய்பவர்கள் தொடர்பான தகவல்களை 118 மற்றும் 1997 என்ற இலக்கங்களுக்கு அழைத்து தெரிவியுங்கள். அத்துடன் எரிபொருட்களை கொள்வனவு செய்து அவற்றை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் செயற்பாடுகளை கட்டுப்படுத்த FuelIMC என்ற செயலியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 2 நாட்களேயான சிசு உயிரிழந்தமை அனைவரும் அறிந்ததே. இவ்வாறு 2 நாட்களேயான சிசு உயிரிழந்தமைக்கு எரிபொருளை தேவைக்கு அதிகமாக கொள்வனவு செய்து பதுக்கி வைத்தவர்களும் ஏதோவொரு வகையில் கரணமானவர்களே. எனவே ஏனைய மக்களின் உயிர்களையும் அவர்களின் பசியைப் போக்கவும் அனைத்து மக்களும் சிந்தித்து செயற்பட வேண்டியது அவசியம். 

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் காரணமாக அமைந்தாலும் நாட்டு மக்களாகிய நாம் தற்போதைய நிலையை உணர்ந்து தேவைக்கு அதிகமாக பொருட்களை வாங்கி பதுக்காது நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல ஒத்தழைப்பு வழங்குவது நம் ஒவ்வொருவரினதும் கடமையும் பொறுப்புமாகவுள்ளது.

( வீ.பி. )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாழைப்பழத்திற்கே இந்த விலையென்றால் ! மக்கள்...

2023-03-10 10:48:55
news-image

அவதானம் ! அதிகரிக்கும் கொள்ளைச் சம்பவங்கள்...

2022-10-07 12:26:10
news-image

சிறுவர்களுக்கு வடக்கில் ஏன் இந்த அவலம்...

2022-09-30 14:49:03
news-image

மக்களின் உயிர்களுடன் விளையாட்டு !!!

2022-10-07 13:56:09
news-image

உலகிற்கு முன்னெச்சரிக்கையாகும் இலங்கை சிறுவர்களின் நிலை

2022-08-27 21:39:00
news-image

இளமையிலேயே கருகும் மொட்டுக்கள் ! யார்...

2022-08-25 13:42:28
news-image

மக்கள் நலனில் அக்கறை கொள்ளுங்கள் !

2022-08-05 14:11:17
news-image

ஜனாதிபதி ரணிலால் உருட்டப்பட்டுள்ள “சர்வகட்சி” என்ற...

2022-08-04 10:05:52
news-image

அரசியல்வாதிகளுக்கு மக்களின் குரல்கள் இன்னும் கேட்கவில்லையா...

2022-05-30 13:12:58
news-image

ஆசியாவின் ஆச்சரியமாக மாறுகிறதா இலங்கை ?

2022-05-28 11:49:44
news-image

அளவுக்கு மிஞ்சி பதுக்காதீர்கள் ! உயிரிழப்புக்களுக்கு...

2022-05-28 12:03:36
news-image

இது ஆரம்பமா ? இல்லை முடிவா...

2022-05-27 11:22:54