(லியோ நிரோஷ தர்ஷன்)

உலகின் மிகவும் பழைமையான பாய்மரக் கப்பலான நோர்வேயின் எஸ்.எஸ். சோர்லாண்டர்  கொழும்பு துறைமுகத்தை  வந்தடைந்துள்ளது. 1927 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாய்மரகப்பலின் எடை 905.3 டொன் என  கப்பலின் கெப்டன் தெரிவித்தார். 

27 பாய்மரங்களைக் கொண்டு அழகுடன் திகழும் எஸ்.எஸ். சோர்லாண்டர் உலக கப்பல் வரலாற்றில் ஒரு அருங்காட்சியகம் . எனவே தான் மதிப்பற்ற நோர்வேயின் முத்து என அதற்கு பெறுமதியளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டர்.

சிறந்த பயிற்சி முகாமாகவும் இந்த கப்பல் திகழ்கின்றது.  இதனால் தான் கப்பற்றுரைசார் மாணவர்களுடன் உலகை சுற்றி வருகின்றது.  ஏ பிளஸ்  அக்கடமி மற்றும் நோர்வேயின் சர்வதேச உயர் பாடசாலை மாணவர்கள் 70 பேருடன்  இரு வருட கால உலகைச் சுற்றிய சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளோம். இந்த மாணவர்கள் கப்பலின் அனைத்து நடவடிக்கைள் மற்றும் பல்வேறு சமுத்திரங்களின் தன்மை என்பன தொடர்பில் முழுமையாக அறிந்துக் கொள்ள  முடிகின்றது. 

 உலகிலுள்ள சமுத்திரங்களில் சுமார் 90 வருட காலமாக பயணம் செய்துள்ளது.  கடற்றுறைசார் மாணவர்களுக்கும் படையணிக்குப் பயிற்சி பெறுபவர்களுக்குமான பயிற்சிக் கப்பலாகவே சேவையாற்றியுள்ளது. 

அதேசமயம் இந்தக் கப்பல் இரண்டாம் உலகப் போரின் போது சிறைக் கப்பலாக செயற்பட்ட இருள் பக்க வரலாற்றையும் கொண்டுள்ளது. மேற்படி கப்பல் தனது இரு வருட கால உலகைச் சுற்றிய சுற்றுப் பயணத்தின் போது மேற்கொள்ளும் 22 நாடுகள், 44 துறைமுகங்களுக்கான விஜயத்தில் ஒன்றாக கொழும்புக்கான இந்த விஜயம் அமைந்துள்ளது.

இந்த விஜயத்தின் போது உண்மையான பாய்மரக் கப்பலில் பயணம் செய்வது தொடர்பான அனுபவத்தை மாணவர்கள் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் கப்பல் மற்றும் கடல்துறைசார் மாணவர்களுக்கு சிறந்த அனுபவத்தை எஸ்.எஸ். சோர்லாண்டர்  கப்பல் பெற்றத் துரம் என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை.  இரு தரப்பினரும் தமது கப்பற்றுறைசார்  அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ள முடியும்.  

ஞாயிற்றுக்கிழமை 'பேர்ள் ஒப் நோர்வே' இலங்கைக்கான பயணத்தை பூர்த்தி செய்து கொண்டு தனது  பயணத்தின் அடுத்த கட்டமாக மாலைதீவு துறைமுகத்தை நோக்கி பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.