(நா.தனுஜா)
அண்மையில் நாட்டில் அமைதிவழிப்போராட்டக்காரர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களையடுத்து உருவான கலவரத்தினால் ஏற்பட்ட நட்டத்தின் பெறுமதி ஒரு பில்லியன் ரூபாவை விட அதிகமாகக் காணப்படக்கூடும் என்று தெரிவித்திருக்கும் ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம், அந்த இழப்பை அரசுக்குச் சொந்தமான தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தினால் ஈடுசெய்யக்கூடியதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் பிரபல கடன் தரப்படுத்தல் நிறுவனங்களில் ஒன்றான ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்றுவந்த ஆர்ப்பாட்டங்களின்மீது கடந்த 9 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்களைத்தொடர்ந்து இடம்பெற்ற கலவரங்களால் ஏற்பட்ட இழப்புக்களை அரசாங்கத்திற்குச் சொந்தமான தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் ஊடாக வழங்கப்படும் வேலைநிறுத்தம், வன்முறைகள், சிவில் கலவரம் மற்றும் பயங்கரவாதம் என்பவற்றுடன் தொடர்புடைய நிதியின் மூலம் ஈடுசெய்யமுடியும்.
இக்கலவரத்தின் விளைவாக ஏற்பட்ட நட்டத்தின் பெறுமதி ஒரு பில்லியன் இலங்கை ரூபாவைவிட அதிகமானதாக அமையும் என்று நாங்கள் கருதுகின்றோம்.
எதுஎவ்வாறெனினும் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் மொத்த நட்டத்தொகை இந்தப் பெறுமதிக்கு உட்பட்டதாகவே அமையும். காப்புறுதி பெற்றவர்கள் இந்த நட்டத்தை ஈடுசெய்வதற்கான நட்டஈட்டுக்கோரிக்கையை முன்வைக்கும்போது, அதனைச் செலுத்துவதற்கு அவசியமான போதியளவு திரவநிலைச்சொத்துக்கள் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்திடம் இருக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.
கலவரக்காரர்களால் வாகனங்களுக்குத் தீவைக்கப்பட்டதுடன் அரசியல்வாதிகளுக்குச் சொந்தமான வீடுகள் உள்ளடங்கலாகப் பெருமளவான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.
அதனால் ஏற்பட்ட நட்டத்தை உடனடியாக மதிப்பிடுவது கடினமென்றாலும் கூட, காப்புறுதி பெற்றவர்கள் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்திடம் நட்டஈட்டுக்கோரிக்கையை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றார்கள்.
அதன்படி வேலைநிறுத்தம், வன்முறைகள், சிவில் கலவரம் மற்றும் பயங்கரவாதம் போன்றவற்றினால் ஏற்படும் இழப்புக்களுக்கான நட்டஈடு தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தினால் நிர்வகிக்கப்படும் வேலைநிறுத்தம், வன்முறைகள், சிவில் கலவரம் மற்றும் பயங்கரவாதம் என்பவற்றுடன் தொடர்புடைய நிதியின் ஊடாக வழங்கப்படும் என்று ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM