*DIALOG-SLESA ஒன்றிணைந்து Free Fire ஈஸ்போர்ட்ஸ் செம்பியன்ஷிப் : ஒரு மில்லியன் ரூபா வரை பரிசுத்தொகை அறிவிப்பு !

Published By: Digital Desk 5

27 May, 2022 | 03:51 PM
image

இலங்கையில் Esports இன்வளர்ச்சிக்கு மேலும் ஆதரவளிக்கும் வகையில் , இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனரும், இலங்கை தேசிய ஈஸ்போர்ட்ஸ் அணியின் உத்தியோக பூர்வ அனுசரணையாளருமான டயலொக் ஆசி ஆட்டாபி எல்சி, இலங்கை ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் SLESA (Sri Lanka Esports Association - SLESA) உடன்கை கோர்த்தவாறு அகில இலங்கை ரீதியிலான ‘Free Fire’ ஸ்போர்ட்ஸ்செம்பியன்ஷிப் 2021 விளையாட்டு போட்டிகளை நடத்தவுள்ளது.

அதற்கமைய இப்போட்டிகள் 2022 ஜூன் 7 ஆம் திகதி தொடக்கம் நடைபெறவுள்ளன. 

இப்போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் தம்மை பதிவுசெய்வதற்கான திகதி ஜூன் 1 வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள பங்கேற்பாளர்கள் https://dlg.lk/3vZdkd9 மூலம் தம்மை பதிவு செய்யலாம்.

மேலும் தகவலுக்கு, Dialog Facebook பக்கம் அல்லது Sri Lanka Esports Facebook பக்கத்தைப் பார்வையிடவும்.  கொவிட் -19  பெருந்தொற்றின் காரணமாக,  மக்களின் நடமாட்டம் மற்றும் பொதுக்கூட்டங்கள் ஆகியன கட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால் , பங்கேற்பாளர்கள் தொலைதூரங்களில் இருத்தவாறோ அல்லது வசதியாக  தங்கள் வீடுகளில்  இருந்தவாறோ இப்போட்டிகளில் பங்குகொள்ளமுடிகின்றமையால் , Dialog - SLESA இன்அகில இலங்கைரீதியிலான மேற்படி ‘Free Fire’ (Free Fire Championship) ஈஸ்போர்ட்ஸ் செம்பியன்ஷிப் போட்டியானது.

அதிக ஈர்ப்பைப் பெற்றுள்ளது எனலாம் .   ரூபா 1 மில்லியன் மதிப்புள்ள கவர்ச்சிகரமான பரிசுப்பொதியை கொண்டுள்ள இப்போட்டியானது , மாவட்ட அளவிலான, ஈஸ்போர்ட்ஸ் விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு மேம்படுத்துவதற்கான ஒருதளமாக செயல்படுவதுடன், மேலும் அவர்கள் சர்வதேச அரங்கில் போட்டியிடுவதற்கான ஒருதளத்தை அமைத்துக்கொடுப்பதற்கும் வழிவகுக்கும்.

பல்வகைமை கொண்ட மேற்படி Free Fire உயர்ரக போட்டியானது கைபேசியில் விளையாடப்படும் போட்டி என்பதுடன்,  ஈஸ்போர்ட்ஸ் வெளியீட்டாளரான Garena வால் இது வடிவமைக்கப்பட்டு மல்டிபிளேயர் ஃபோர்ரோயல் மொபைல் விளையாட்டை அடிப்படையாகக்கொண்டு  வெளியிடப்படுகின்றது.   

ஸ்ரீலங்கா ஈஸ்போர்ட்ஸ் எசோஷியேஷன் (LESA) தலைவர் ரவீன் விஜய திலக அவர்கள் இது குறித்து தெரிவிக்கையில், "அகில இலங்கை ரீதியிலான DIALOG-SLESA  Free Fire செம்பியன்ஷிப் 2021 போட்டியானது, தற்போது நிலவி வருகின்ற உலகளாவிய ஈஸ்போர்ட்ஸ் புரட்சிக்கு இலங்கையின் Esports போட்டியாளர்களை தயார்படுத்துவதில் ஒரு படிக்கல்லாக அமைந்துள்ளது எனலாம்.

பிராந்திய மட்டத்திலான ஈஸ்போர்ட்ஸ் போட்டியாளர்களை  நாட்டுக்கு இணையாக வைத்திருக்க நாம் மேற்கொண்டுள்ள இந்த பயணத்தில் Dialog எங்களுடன் இணைந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் " என்றார். 

இப்போட்டிகளின் உத்தியோக பூர்வ அனுசரணையாளர்களாகிய டயலொக் ஆசி ஆட்டா அனைத்து ஈஸ்போர்ட்(Esport) பிரியர்களின் நலன் கருதி Thepapare.com, SLESA & Gamer.lk சமூக ஊடகங்கள் ஊடாக போட்டிகளை நேரலையில் ஒளிபரப்புவதற்கான ஏற்பாட்டைச் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

டயலொக் ஆசி ஆட்டாபி எல்சி இலங்கை தேசிய கிரிக்கெட், வலைப்பந்து மற்றும் கரப்பந்து அணிகளுக்கான பெருமை மிகு அனுசரணையாளர்களாக செயற்பட்டு வருவதுடன், ஜனாதிபதி தங்கக்கிண்ண கரப்பந்தாட்டம் , ஜூனியர்க ரப்பந்தாட்டம், தேசிய ஜூனியர் மற்றும் சீனியர் வலைப்பந்து போட்டிகள், பாடசாலை ரக்பி , பிரிமியர் கால்பந்து போட்டிகள் மற்றும் பராலிம்பிக் உட்பட இராணுவபரா  விளையாட்டுக்கள், தேசிய பரா விளையாட்டுகள் மற்றும் உலக பாரா லிம்பிக் விளையாட்டுகளில்  கலந்து கொள்ளும் இலங்கை அணி ஆகிய அனைத்திற்கும் டயலொக் ஆசி ஆட்டா நிறுவனம் அனுசரணை வழங்கி நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிட்னி ட்ரக் க்ளசிக்: உலக மெய்வல்லுநர்...

2025-03-16 00:05:00
news-image

சென் தோமஸ் அணியை 4 விக்கெட்களால்...

2025-03-15 23:59:55
news-image

49ஆவது தேசிய விளையாட்டு விழா நகர்வல...

2025-03-15 20:54:13
news-image

ஓரளவு சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு...

2025-03-14 19:29:36
news-image

நிப்புனைத் தொடர்ந்து ரமேஷ் சதம் குவிப்பு;...

2025-03-14 21:49:45
news-image

நியூஸிலாந்தை மண்டியிடச் செய்த அறிமுக வீராங்கனை...

2025-03-14 17:33:10
news-image

நியூட்டனின் சகலதுறை ஆட்டத்தால் 2ஆம் அடுக்கு...

2025-03-14 14:08:12
news-image

அவிஷ்க, கவின், அசலன்க ஆகியோரின் அபார...

2025-03-13 19:45:02
news-image

கண்டி அணிக்கு எதிரான போட்டியில் பலமான...

2025-03-13 19:00:12
news-image

மாதத்தின் சிறந்த வீரர், வீராங்கனை ஐசிசி...

2025-03-13 16:16:47
news-image

நஞ்சிங் உலக மெய்வல்லுநர் உள்ளக அரங்க...

2025-03-14 13:39:02
news-image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்: சங்கா சதம்...

2025-03-12 17:16:17