தண்­டனை சட்­டக்­கோ­வையின் சரத்­துக்­களை திருத்தும் வகையிலும் சம­யத்­திற்கு எதி­ராக குரோத தன்­மையை வளர்க்கும் வகையில் கருத்­துக்­களை வெளியி­டு­வ­தற்கு எதி­ரான சட்­ட ­மூ­லம் தற்­போது அதை கொண்­டு­வர எதிர்­பார்த்­த­வர்­க­ளி­னா­லேயே இல்­லா­தொ­ழிக்­கப்­பட்­டுள்­ளது என நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க் ஷ தெரி­வித்­துள்ளார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.

இதன்­போது அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நவம்பர் மாதம் 06ஆம் திகதி தேசிய அர­சாங்­கத்­தினால் வெளியி­டப்­பட்­டுள்ள வர்த்­த­மானி அறி­வித்­த­லின்­படி தண்­டனை சட்ட கோவையின் பத்­தொன்­பதாம் அதி­கா ரம் மற்றும் பதி­னைந்தாம் சரத்­துக்­களை மாற்­றி­ய­மைக்க உத்­தே­சித்­தது. இதன்­படி தண்­டனை சட்டக்கோவையின் சரத்­துக்கள் மதம் தொடர்­பான பிர­சா­ரங்கள் மற்றும் சமயம், மதம் தொர்­பான கருத்­துக்­களை வெளியிடும் போது அவை தொடர்பில் யாரேனும் அதி­ருப்தி அடை­வார்­க­ளாயின் அது தொடர்­பாக பொலிஸில் முறைப்­பா­டு­களை செய்­யலாம் எனவும் அவ்­வா­றான குற்­றங்­க­ளுக்கு, இர ண்டு வருட சிறைத்­தண்­டனை விதிக்­கப்­படும் எனவும் கூறப்­பட்­டது.

இந்­நி­லையில், சிறு­பான்­மை­யின தமிழ் முஸ்லிம் தலை­மை­களும் பெரும்­பான்­மை­யின பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இணைந்தே இந்த சட்­ட­மூ­லத்­திற்கு ஆத­ரவு வழங்­கி­யி­ருந்­தனர். ஆனால், பின்பு அச்­சட்­டத்தை அமுல்­ப­டுத்த நினைத்­த­வர்­களே இச்­ச­ரத்­துக்கள் மத சுதந்­தி­ரத்­தையும் சமய அமைப்­புக்­களின் செயற்­பா­டு­க­ளையும் தடை செய்­வ­தாக கூறி ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்டு அந்த திருத்­தங்­க­ளுக்கு எதிர்ப்பை தெரி­வித்­தனர். இதன்­கா­ர­ண­மா­கவே இந்த சட்­ட­முலம் பாரா­ளு­மன்­றத்­திற்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

நாட்டின் நல்­லாட்­சிக்­கென செயற்­படும் தேசிய அர­சாங்கம் மதங்­களின் மேம்­பட்ட செயற்­பா­டு­க­ளுக்­கென உதவ தயா­ரா­க­ வுள்­ளது. பௌத்த சம­யத்தை வளர்ப்­ப­தற்­கென பல வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்­துள்ளோம். இதன்­படி அடுத்த வரு­டத்தின் ஆரம்­பத்தில் பௌத்த சம­யத்தின் மேம்­பாட்­டுக்­கென சட்­ட­மூலம் ஒன்று கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளது. மேலும் தேசிய அர­சாங்­கத்­தினால் முன்­வைக்­கப்­பட்ட வரவு செல­வுத்­திட்டத்தில் பௌத்த அற­நெறி பாட­சா­லை­க­ளுக்­கெ­னவும், பௌத்த சம­யத்­துக்­கெ­னவும் மொத்தமாக 534 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளது. இது முன் னைய வரவு – செலவுத்திட்டத்தை விட சுமார் நாற்பத்து மூன்று மில்லியன் அதிக மான தொகையாகும்.

எனவே, தேசிய அரசாங்கத்தினால் சமயத் துக்கான முறையான அங்கீகாரம் வழங்க வில்லை என கூறுவதில் எவ்விதமான உண் மையும் இல்லை என அவர் கூறினார்.