பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணம் பஷில் என்பதை மக்கள் நன்கு அறிவர் - அனுர பிரியதர்ஷன யாப்பா

Published By: Digital Desk 3

27 May, 2022 | 08:30 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதியில் நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ளமைக்கு முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தவறான பொருளாதார முகாமைத்துவம் பிரதான காரணம் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். 

இரட்டை குடியுரிமையாளருக்கு 21 ஆவது திருத்தத்தில் தடை விதிக்கப்படாவிடின் சமூக கட்டமைப்பில் மீண்டும் அமைதியற்ற தன்மை தோற்றம் பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடிக்கு 74 வருடகால அரசியல் காரணம் என்று ஒருதரப்பினர் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.74 வருடகால அரசியல் நாட்டிற்கு பல்வேறு சிறந்த சேவையாற்றியுள்ளதை எவரும் மறுக்க முடியாது.

சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதியில் நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொள்வதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும்.

பொருளாதார விவகாரம் தொடர்பான தீர்மானங்களின் போது முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்கவில்லை.

பெரும்பான்மை பலம் தன்னிடம் உள்ளது என்ற நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ததன் விளைவை தற்போது முழு நாடும் எதிர்க்கொண்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக தீவிரமடைந்து தற்போது அரசியலமைப்பு திருத்தத்தை நோக்கியதாக விரிவடைந்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டும், இரட்டை குடியுரிமையுடையவர் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்த சட்டமூல வரைபில் பாரிய குறைப்பாடுகள் ஏதும் இதுவரை இனங்காணப்படவில்லை. இரட்டை குடியுரிமை உடையவர் அரசியலில் செல்வாக்கு செலுத்தற்கு முழுமையாக தடை விதிக்கப்பட வேண்டும். 

அத்தியாவசிய பொருட்களுக்காக வரிசையில் நிற்கும் மக்கள் அமெரிக்க பிரஜை இலங்கை பிரஜைகளை வீதிக்கி தள்ளிவிட்டார்'என விமர்சிக்கிறார்கள்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தில் மக்களின் எதிர்பார்ப்பு முழுமையாக நிறைவேற்றப்படாவிடின் சமூக கட்டமைப்பில் மீண்டும் அமைதியற்ற தன்மை தோற்றம் பெறும்.

224 பாராளுமன்ற உறுப்பினர்களும் தம்மை தெரிவு செய்த மக்களின் நிலைப்பாட்டிற்கு அமைய 21ஆவது திருத்தத்தில் தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழையும் சிங்களத்தையும் ஒரேநேரத்தில் கற்க முயன்று...

2023-12-10 12:49:05
news-image

மிஹிந்தலை புனித பூமியில் சேவையாற்ற பாதுகாப்பு...

2023-12-10 12:35:03
news-image

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு 

2023-12-10 12:20:07
news-image

உலக ரீதியில் பலம் வாய்ந்த நாடுகளின்...

2023-12-10 12:14:23
news-image

கடன் செலுத்தும் காலத்தை நீடித்து வட்டியைக்...

2023-12-10 11:44:10
news-image

கொத்து கொத்தாக இலங்கையர்களின் உடலங்கள் இஸ்ரேலில்...

2023-12-10 11:16:12
news-image

நாடு முழுவதும் மின் துண்டிப்பு :...

2023-12-10 11:03:57
news-image

இலங்கைக்கு தேசிய விடுதலை இயக்கமே அவசியம்...

2023-12-10 11:08:10
news-image

செவ்வாயன்று இலங்கைக்கு மங்களகரமான செய்தி கிடைக்கும்...

2023-12-10 11:22:31
news-image

கொஸ்லந்தை - கெலிபனாவெல பகுதியில் மண்சரிவு...

2023-12-10 12:43:20
news-image

மஹாநாயக்க தேரரின் குற்றச்சாட்டு தொடர்பில் அரசாங்கம்...

2023-12-09 21:05:21
news-image

தமிழரசின் தலைமைக்கு மும்முனையில் போட்டி

2023-12-09 20:44:27