(எம்.ஆர்.எம்.வசீம்)

எமது சங்கம் அரசாங்கத்துக்கு முன்வைத்திருக்கும் முக்கியமான விடயங்களை உத்தேச 21ஆம் திருத்தச்சட்டத்துக்கு உள்வாங்க தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ்விடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், அதன் செயலாளர் சட்டத்தரணி பாலபடபெதி மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் ஆகியோருக்கிடையில் (25) புதன்கிழமை  மாலை நீதி அமைச்சில் பேச்சுவார்தை ஒன்று இடம்பெற்றது. இதன்போதே இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினர் இந்த கோரிக்கையை அமைச்சரிம் முன்வைத்துள்ளனர்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பாக கலந்துரையாட, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்புக்கமைவே, இரு தரப்புக்குமிடையில் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. 

இதன்போது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக எமது சங்கத்தால் சில பிரேரணைகளை அரசாங்கத்துக்கு சமர்ப்பித்திருக்கின்றது. அதில் அடங்கி இருக்கும் முக்கியமான விடயங்களை 21ஆம் திருத்தச் சட்டத்துக்கு உள்வாங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கலந்துரையாடலின்போது நீதி அமைச்சருடன் அமைச்சின் செயலாளர் வசன்த்தா பெரேராவும் கலந்துகொண்டுள்ளனர்.