இந்தியாவிடமிருந்து மேலும் 1.5 பில்லியன் டொலர்களைப் பெறும் எதிர்பார்ப்பில் இலங்கை - மத்திய வங்கி ஆளுநர்

Published By: Vishnu

27 May, 2022 | 01:30 PM
image

(நா.தனுஜா)

இந்தியாவிடமிருந்து பரஸ்பர பரிமாற்றல் வசதி அடிப்படையில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், ஆசிய ஒத்துழைப்பு ஒன்றிணைவின் ஒத்திவைக்கப்பட்ட ஒதுக்கீடுகளிலிருந்து மற்றுமொரு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்ப்பதாகவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஆசிய ஒத்துழைப்பு ஒன்றிணைவின்கீழ் இறக்குமதிகளுக்காக இலங்கையால் இந்தியாவிற்குச் செலுத்தப்படவேண்டியுள்ள 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களையே இந்தியா மேற்கண்டவாறு ஒத்திவைத்துள்ளது.

இலங்கையைச்சேர்ந்த இறக்குமதியாளர்கள் ஒவ்வொரு இருமாதங்களுக்கும் இந்தியாவிற்குச் செலுத்தவேண்டிய 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை மத்திய வங்கிக்குச் செலுத்துகின்றனர்.

அவ்வாறு செலுத்தப்படும் கொடுப்பனவுகளை ஒத்திவைப்பதற்கு இந்தியா இணங்கியுள்ளது என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு மேலதிகமாக இந்தியாவிடமிருந்து பரஸ்பர பரிமாற்றல் வசதி அடிப்படையில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொள்வதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும், இருப்பினும் இது இன்னமும் கலந்துரையாடல் மட்டத்திலேயே காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவினால் எரிபொருள் கொள்வனவிற்காக கடனடிப்படையில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டதாகவும் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பேராசிரியர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் வடக்கு, கிழக்கு...

2023-05-29 17:42:27
news-image

புத்தசாசனத்துக்கு பாதிப்பெனக் குறிப்பிட்டு உண்மை பிரச்சினைகளை...

2023-05-29 15:42:48
news-image

புத்தசாசனத்தை அவமதித்து சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடையும்...

2023-05-29 14:35:56
news-image

அருவக்காலு குப்பைகளை இறக்குதல், ஏற்றுதல், குப்பைகளை...

2023-05-29 17:37:32
news-image

இந்திய அரசாங்கம் நட்டஈடு கோரியதாக எந்த...

2023-05-29 12:59:56
news-image

பாணந்துறையில் இரண்டு மாடி வீட்டிலிருந்து சடலம்...

2023-05-29 17:28:53
news-image

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல் குறித்து அரச...

2023-05-29 17:35:29
news-image

கிளிநொச்சி, நுவரெலியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பில் உணவுபாதுகாப்பின்மை...

2023-05-29 17:43:41
news-image

ஒரு கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் கொள்ளை...

2023-05-29 16:40:54
news-image

யாழ்.நகரில் விடுதியில் தங்கி இருந்த இரு...

2023-05-29 16:28:23
news-image

சம்மாந்துறைக்கும் சோமாவதிக்கும் சென்ற இரு வேன்கள்...

2023-05-29 16:17:42
news-image

கைதான இராஜாங்கனை சத்தாரத்ன தேரருக்கு விளக்கமறியல்

2023-05-29 16:12:12