Published by T. Saranya on 2022-05-27 12:48:38
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் பிரதமர் தீர்மானம் எடுக்கவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் முடிவை பிரதமர் எடுத்ததாக வரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. சமர்ப்பிக்கப்படவிருக்கும் இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தில் நிவாரணங்கள் வழங்கப்படவுள்ள அதேநேரம், சுகாதாரம் மற்றும் கல்வியை தவிர அனைத்து அமைச்சுகளுக்குமான ஒதுக்கீடுகள் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.