(என்.வீ.ஏ)

வெலொசிட்டிக்கு எதிராக புனே, மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் வியாழக்கிழமை (26) இரவு நடைபெற்ற மகளிர் ரி20 செலஞ் கிரிக்கெட் போட்டியில் 15 ஓட்டங்களால் ட்ரெய்ல்ப்ளேஸர்ஸ் வெற்றிபெற்றது.

Kiran Navgire smashed a 25-ball half-century, Trailblazers vs Velocity, Women's T20 Challenge, Pune, May 26, 2022

வெலோசிட்டிக்கு எதிரான போட்டியில் சப்மேனி மேகனாவும் ஜெமிமா ரொட்றிகஸும் குவித்த அரைச் சதங்கள், ட்ரெய்ல்ப்ளேஸர்ஸின் வெற்றிக்கு வித்திட்டன.

எவ்வாறாயினும், 3 அணிகள் பங்குபற்றும் இந்த சுற்றுப் போட்டியில் நிகர ஓட்டவேக அடிப்படையில் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை ட்ரெய்ல்ப்ளேஸர்ஸ் இழந்தது.

நிகர ஓட்டவேக அடிப்படையில் சுப்பர்நோவாஸும் வெலோசிட்டியும் நாளை சனிக்கிழமை (27) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாட தகுதபெற்றன.

ட்ரெய்ல்ப்ளேஸர்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 191 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வெலோசிட்டி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

Kiran Navgire swats one away, Trailblazers vs Velocity, Women's T20 Challenge, Pune, May 26, 2022

ஆனால், வேலோசிட்டி 158 ஓட்டங்களை அடைந்த போது அதன் இறுதிப் போட்டி வாய்ப்பு உறுதியானது.

ட்ரெய்ல்ப்ளேஸர்ஸ் சார்பாக யஸ்டிக்கா பாட்டியா (19), ஷவாலி வர்மா (29) ஆகிய இருவரும் 4 ஓவர்களில் 36 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

அவர்கள் இருவரும் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து கிரான் பிரபு நவ்கிரேயும் லோரா வுல்வார்டும் 3ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு பலம் சேர்த்தனர்.

வுல்வார்ட் 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து அணித் தலைவி தீப்தி ஷர்மா (2) களம் புகுந்த சொற்ப நேரத்தில் வெளியேறினார்.

Jemimah Rodrigues and S Meghana stabilised Trailblazers' innings, Trailblazers vs Velocity, Women's T20 Challenge, Pune, May 26, 2022

ஆனால், திறமையாக துடுப்பெடுத்தாடிய கிரான் பிரபு நவ்கிரே 34 பந்துகளில் 5 சிக்ஸ்கள், 5 பவுண்டறிகளுடன் 69 ஓட்டங்களைக் குவித்து இறுதிப் போட்டிக்கு அவசியமான இலங்கை அடைய உதவினார்.

ஸ்னேஹ் ரானா (11), சிம்ரன் பஹதூர் (12) ஆகியோரும் மத்திய வரிசையில் அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கினர்.

பந்துவீச்சில் பூணம் யாதவ் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ராஜேஷ்வரி கயக்வாட் 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ட்ரெய்ல்ப்ளேஸர்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 190 ஓட்டங்களைப் பெற்றது.

Trailblazers' Smriti Mandhana and Velocity's Deepti Sharma at the toss, Trailblazers vs Velocity, Women's T20 Challenge, Pune, May 26, 2022

மொத்த எண்ணிக்கை 13 ஓட்டங்களாக இருந்தபோது அணித் தலைவி ஸ்ம்ரித்தி மந்தானா (1) ஆட்டமிழந்தார்.

ஆனால், சப்னேனி மெகனாவும் ஜெமிமா ரொட்றிகஸும் 2ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 113 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்டனர்.

மெகனா 47 பந்துகளில் 7 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 73 ஓட்டங்களையும் ஜெமிமா 44 பந்துகளில் 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 66 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஹேலி மெத்யூஸ் (27), சொவியா டன்க்லி (19) ஆகியோரும் அணிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கினர்.

பந்துவீச்சில் கெட் குரூஸ், அயாபொங்கா காகா, ஸ்னேஹ் ரானா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.