பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மீது கடந்த 9ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டாவ பிரதேசத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, கடந்த 9 ஆம் திகதி கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் வைத்து தாக்குதலுக்குள்ளானதில் தலை மற்றும் கை ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம பயணித்த வாகனமும் சேதமாக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் இரு சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.