” கோட்டா கோ கம” மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் இன்று 49 நாளாகவும் இடம்பெற்று வருகின்றது. நாளையதினம் 28 ஆம் திகதி போராட்டம் ஆரம்பமாகி 50 நாட்கள் நிறைவுபெறுகின்றது.
இந்நிலையில் நாளையதினம் கறுப்புக்கொடிகளை ஏந்தி போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மக்களிடம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,உத்தியோகபூர்வ கிராம சேவையாளர் காரியாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகம் அமைந்துள்ள பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி முதல் கொட்டும் மழை, வெயில் என்று பாராது இரவு பகலாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

கோட்டா கோ கம போராட்டக் களத்தில் கலைக்கூடம், சிகை அலங்கார நிலையம், நூலகம் போன்றன அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கோட்டா கோ கம கிராமத்தில் டியர்கேஸ் சினிமா அரங்கத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு திரைப்படக் காட்சிகள் காண்பிக்கப்படவுள்ளன.
இன்று 27 ஆம் திகதி இரவு 6.30 மணிக்கு சிங்கள மொழி திரைப்படமான “ மச்சான்” , 28 ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு “த கிரோட் டிக்டேட்டர் ” என்ற ஆங்கில மொழி திரைப்படமும் 29 ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு “விசாரணை” என்ற தமிழ் மொழித் திரைப்படமும் திரையிடப்படவுள்ளது.